மகளிருக்கான துல்லியமான நோயறிதல் மருத்துவ சேவை திட்டம்

சென்னை, பிப். 10- இந்தியாவின் மிகப் பெரிய நோயறிதல் சேவை வழங்கும் நிறுவனங் களில் ஒன்றான மெட் ஆல் (MEDALL) நிறுவனம், கர்ப் பிணி பெண்களுக்கு  உண்டா கும் அச்சம் குறித்த கவலை களை போக்குவதற்காக, வீட் டிலேயே இரத்த சேகரிப்பு சேவை, பரிசோதனை அறிக் கைகளை அதன் செயலி மற் றும் இணையத்தில் அறியும் சேவை மற்றும் மூன்று மாதங் களுக்கு ஒரு முறை பெற்றோர் ஆலோசனை அமர்வு போன்ற சேவைகளை வழங்கு கிறது. தனிப்பட்ட சோதனை களின் தொகையை விட கிட்டத்தட்ட 40% குறைவான விலையில், கர்ப்ப பராமரிப்பு மற்றும் பரிசோதனைகள் தற் போது கிடைக்கப் பெறுகிறது.

இது குறித்து மெட் ஆல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ஜின் ஆனந்த் கூறுகை யில், கிளினிக்குகள் மற்றும் பிற வெளி-நோயாளி அமைப் புகளில் ஆலோசனை வழங் கும் பல்வேறு மகப்பேரு மருத்துவர்களிடம் ஆலோ சனை பெறும் பெண்களுக்கு, இத்தகைய முழுமையான தரம் வாய்ந்த மற்றும் துல்லி யமான நோயறிதல் சேவைகள் கிடைப்பது கடினமாகிறது. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய கதிரியக்கவியல் மற் றும் நோயியல் சோதனைகள் நிபுணத்துவம் பெற்ற சோதனை மய்யங்களுடன் நாங்கள் தயாராகவுள்ளோம் என்று கூறினார்.

Comments