மதுக்கூர் தெய்வானை அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

மதுக்கூர், பிப். 20- பட்டுக் கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் பெரியார்நகர் ரெத் தினம் அவர்களின் வாழ்வி ணையரும், கழகத்தோழர் பாலா, மாரிமுத்து, ரேணுகா ஆகியோரின் தாயாருமான தெய்வானை அவர்களின் படத்திறப்பு  17-.2.-2021 அன்று மாலை 7 மணியளவில் அவர் களது இல்லத்தில்  பட்டுக் கோட்டை மாவட்டத் தலை வர் பெ.வீரையன் தலைமை யில், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம் முன்னிலையில் நடைபெற்றது.

 காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்.தனசேகர், இந்திய கம் யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர்பக்கிரிசாமி, தி.மு. மகாலிங்கம், தமிழக மக்கள் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தங்க. குமரவேல் ஆகியோர் உரை யாற்றினார்கள். தெய்வானை அம்மாள் படத்தினை திறந்து வைத்து கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றினார்.

இறுதியாக  கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப் பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் நினைவேந்தல் உரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் கள் அரு. நல்லத்தம்பி, இரா.நீலகண்டன், மாவட்ட . தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட இளைஞரணி செய லாளர் அரவிந்தகுமார், சம ரன் வெற்றிமாறன், பட்டுக் கோட்டை நகரத் தலைவர் சிற்பி.சேகர், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் நடராசன், மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி அண்ணாத்துரை, ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், ஒன் றிய துணைத்தலைவர் சிவாஜி, நகரத் தலைவர் சிவக்குமார், சரவணன், பேராவூரணி சக்தி வேல், தொண்டராம்பட்டு வீரமணி, ஒன்றிய பக தலைவர் புலவஞ்சி காமராசு உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Comments