கனடா நாட்டில் சஸ்காச்சுவான் மாகணத்தில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் தனது கொடுமையான வாழ்க்கையை
நூல் மூலம் உலகின் பார் வைக்குக் கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கேந்திரவிண்ணி என்ற சஸ்காச்சுவான் மாகாண பெண்ணின் வாழ்க்கையில் நடந்த குடும்ப வன்முறை குறித்த செய்தி சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் அனைத்து நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
இவர் தன் மீது நடந்த தாக்குதல் குறித்து நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
கனடிய பூர்வீக குடிகளின் மாநிலங்களில் ஒன்றான சஸ்காச்சுவானில் கேந்திர விண்ணி என்ற பெண் கண்ணீருடன் முகம் முழுவதும் காயத்துடன் இருந்த அவரது ஒளிப்படம் கொடூரமானது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு கைக்குழந்தையோடு வீதி யில் வீசப்பட்டார்.
குடும்ப வன்முறை என்ற பெயரில் இந்த கொடூரத் தாக்குதல் குறித்து கனடாவில் அனைவராலும் பேசப்படும் பொருளாக மாறியது. தற்போது அவர் பாதுகாப்பு இல் லம் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையைத் தனது மகளுடன் கழித்து வருகிறார்.
தனது சகாக்களுடன் பழைய வன்முறை பாதிப்பிலிருந்து
மீண்டுவரும் அவர், தற் பொழுது சமூக அமைப்பு ஒன்றோடு சேர்ந்து குடும்ப
வன்முறைகளில் பாதிக் கப்படும் பெண்களைக் காக்கும் விடுதி ஒன்றில் தங்கி
அனைவரோடும் இணைந்து பணியாற்றி வருகிறார்.
தனது நூலில், தான் எவ்வாறு பாதிக் கப்பட்டேன் என்பதைக் கூறியுள்ளார். அவர் தன்னுடைய பல்கலைக்கழக பட்டப் படிப்பை 2012ஆம் ஆண்டு முடித்துவிட்டு வாழ்க்கை இணையர் ஒருவர் தேவை என்று முடிவெடுத்து தனக்குத் தகுதியான ஒருவரைத் தேடினார்.
அப்பொழுது ஒரு நபர் இவருக்கு அறி முகம் ஆனார். அந்த நபரை அவர் நம்பி விட்டார். அவர் தான் இனி தனக்கு எதிர் கால வாழ்க்கை என்று நினைத்துக் கொண் டார். உடனடியாக தனது வசிப்பிடத்தை அவரோடு பகிர்ந்துகொண்டார்.
ஆனால் அந்த மனிதரின் உண்மை முகம் தெரியவில்லை.
வீட்டில் நுழையும் பொழுதே கேந்திராவிண்ணியிடம் என்ன இருக்கிறது என்று அந்த ஆண் சோதனை செய்தான். இதை
அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டார். இது மிகப்பெரிய பாதிப்பின் அடையாளம் என்பதை அவர் கண்டறியவில்லை. அந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர். சில நேரங் களில் தனது போதைப்பழக்கத்தை கேந் திராவிண்ணியிடம் கூறியுள்ளார். ஆனால் திருந்திவிடுவார் என்ற நினைப்பில்
மன் னித்து விட்டார்.
ஆனால் அவர் பணத்திற்காக கேந்தி ராவை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். கேந்திரவிண்ணி கர்ப்பிணியாக
இருந்தார். இருப்பினும் அவர் கர்ப்பமுற்ற காலத்திலும் அன்புக்குப் பதில் அவருக்கு வன்முறையான வார்த்தைகளும் அடியும் தான் கிடைத்தது.
தனது பெண் குழந்தையோடு மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு வந்த போதும் அன்புக்குப் பதிலாகத் தாக்குதலே மிஞ்சி இருந்தது. இறுதியில் அவர்
தன்னுடைய நிலையை உள்ளூர் ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்தார்.
அந்த செய்தி தான் கனடாவில் தலைப்பு செய்தியாக மாறி இருந்தது. சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தற் போது தலைப்பு செய்தியாகி உள்ளார்
இப்போது அவர் வன்முறையால் பாதிக் கப்படும் பெண்களை மீட்கும் நபராகத்
தலைப்பு செய்திகளில் உள்ளார்
குடும்ப வன்முறையிலிருந்து தான் மீண்டது மற்றும் மீட்கப்பட்ட காரணம் குறித்து எழுதியுள்ளார். இந்த நூல் வெளி யீட்டு விழாவில் பெண்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட வேண்டாம். குடும்ப வன்முறை குறித்து வெளியே பேசுங்கள். குடும்ப வன்முறையில் ஈடுபடும்
அனைவருக்கும் தண்டனை வாங்கித் தரவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.