நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய இளங்கீரனை கைது செய்வதா?

தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் கண்டனம்

சென்னை, பிப். 14- தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டா லின் முகநூல் பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது:-

திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக் காக வீராநந்தபுரம் கிராமத் தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாய மான கோரிக்கைகளை முன் வைத்து போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் இளங்கீரனை அடித்து, இழுத்துச் சென்று அராஜகமாக கைது செய் துள்ள .தி.மு.. ஆட்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

"விவசாயி" என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே தனக்கு கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவ சாய சங்கத் தலைவரை அரா ஜகமாக கைது செய்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.

"மனிதாபிமானம் கிலோ என்ன விலை" என்று விவசாயிகளிடம் கேட்கும் எடப் பாடி பழனிசாமி, ‘என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்' என்பதை உள் நோக்கமாக வைத்து இளங் கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு மனிதநேய மற்ற முறையில் கைது செய் திருப்பது காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கை. விவ சாயிக்கு ஒரு கையில் "கடன் தள்ளுபடி அறிவிப்பு" இன் னொரு கையில் கடுமையாகத் தாக்கி "கைவிலங்கு" போடுவது என்ற முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது. அதிகார வெறி தலைக்கேறுவ தால் படுதோல்வி அடையப் போவது எடப்பாடி பழனி சாமிதானே தவிர, போராடும் விவசாயிகள் அல்ல. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Comments