டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· மத்திய அரசு வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உண்டு என்ற வாய்மொழி கூறி ஏமாற்றும் தந்திரம். வேளாண் சட்டங்கள், சிறு விவசாயிகள் விளைபொருட்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியாத நிலையில் குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்படும் என மூத்த பத்திரிக்கையாளர்
பர்சா வெங்க டேஷ்வர ராவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் காரணமாக ராஜஸ்தான், அரியானா, மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ஜாட் இனத்தவர் அதிகமாக உள்ள 40 நாடாளுமன்ற
தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படும் என பாஜகவின் தலைவர்கள்
தெரிவித்து வரும் கருத்தின் அடிப்படையில் ஜே.பி. நட்டா
உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
· மாநிலங்கள் தோறும் நடைபெற்று
வந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தை நிறுத்திவிட்டு மீண்டும் டில்லி அருகே போராட்ட களத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளைத் திரட்ட விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சு வரும்போது அக்கட்சி முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கும் என்று
தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டினார்.
· குற்றவாளிகளைத் தடுக்கிறோம் என்ற போர்வையில் அமைதியின்மையை அமைதிப்படுத்த தேசத் துரோகச் சட்டத்தை செயல்படுத்த முடியாது என டில்லி நீதிமன்றம்
கூறியுள்ளது.
தி
ஹிந்து:
· நாடு முழுவதும் பிப்.25ஆம் தேதி நடைபெற உள்ள 'பசு அறிவியல்' தேர்வில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப் படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தி
டெலிகிராப்:
· நிர்மலா சீதாராமன் ராகுல் காந்தியை டோம்ஸ்டே மேன் என்று பெயரிடுகிறார். நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவரின் சரியான பங்கு அவர் மீதான நம்பிக்கை இழப்பு என விவரிக்கப்படும் போது, இந்தியா
உருவாக்கும் மதிப்புகளின் சிதைவு முழுமையான தாகத் தெரிகிறது. மோடியின் அரசு அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தோற்றத்தை அழிக்கவும், அதன் வாக்காளர்கள் ஆட்சியாளர்களை விமர்சிக்க அனுமதிக்கப்படாதவர்களாக மாற்றவும் விரும்புகிறது. நிதி
அமைச்சர் நிர்மலா சீத்தராமன் அந்த நிகழ்ச்சி நிரலை பிரதிநிதித்துவப்படுத்தினார்,
மக்களையோ அல்லது நாடாளுமன்ற ஜன நாயகத்தையோ அல்ல.
· ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் கருத்தியல் பயணம் - உணர்ச்சி களோடு விளையாடுவது, உணர்ச்சிகளைப் பிளவுபடுத்துவது, வில்லன்களை உருவாக்குவது. இதன் மூலம் மோடி அரசு மக்கள் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
- குடந்தை
கருணா
17.2.2021