தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்கவில்லை : மத்திய அரசு விளக்கம்!

புதுடில்லி. பிப்.16 தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்குவது தொடர் பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏழு தாழ்த் தப்பட்ட பிரிவு இனங் களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்ட பிரிவில் இதுவும் ஒன்றாக  இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, தாழ்த்தப் பட்ட பிரிவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டு இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினராக மாற் றப்படுவார்கள் என்பது முழுவதும் தவறானது என்றும், உண்மை நிலையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


Comments