குடந்தையில் திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

குடந்தை, பிப். 20- குடந்தை கழக மாவட்டம், குடந்தை ஒன்றியம், பட்டீஸ்வரம் கிளைக் கழகம் சார்பில்  பட் டீஸ்வரம் பெரியார் பெருந் தொண்டர் .அய்யாசாமி நினைவு நாள் கூட்டமாக திராவிடம் வெல்லும் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் 17-02-2021  புதன்கிழமை,மாலை 6.00 மணியளவில் பட்டீசு வரம் கடைவீதியில் பெரியார் பெருந்தொண்டர் .செந் தமிழ்பாண்டியன் தலைமை யில் பட்டீசுவரம் பெரியார் பெருந்தொண்டர் சி.இராம சந்திரன், சோழன் மாளிகை பெரியார் பெருந்தொண்டர் இரா.கிருஷ்ணசாமி, பட்டீஸ்வரம் கழக தலைவர் .இளவழகன் ஆகியோர் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழக பேச்சா ளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றி னார். மேலும் தஞ்சை மண் டல செயலாளர் .குருசாமி, மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு. துரைராஜ், பகுத்தறிவாளர் கழகம் தி.இரா ஜப்பா, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், மாவட்ட  து. தலைவர் வெ. கோவிந்தன், மாவட்ட மகளி ரணி துணை செயலாளர் மு.திரிபுரசுந்தரி, வலங்கை ஒன்றிய தலைவர் . சந்திரசேகரன், தி.மு. பொறுப் பா ளர் அரங்க. பாலசுப்ரமணி யன், குடந்தை  பெருநகர செயலாளர் பீ.இரமேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் எம். திரிபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  திருவிடை மருதூர் ஒன்றிய அமைப்பா ளர் .சிவகுமார், வலங்கை ஒன்றிய செயலாளர் . பவானி சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொணடு சிறப்பித் தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந் தோரை ஒன்றிய இளைஞரணி செயலாளர் செ.தென்றல் சதீஷ்குமார் வரவேற்றும் பகுத் தறிவாளர் கழக தோழர் போட்டோ மகாதேவன் நன்றி கூறியும் உரையாற்றினர்.

Comments