பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் பணித் தோழர் ஆறுமுகம் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்

திருச்சியில் தந்தை பெரியாரால் துவக்கப்பட்டு  60 ஆண்டுகளைக் கடந்து  இன்றும் சிறப்பாக நடைபெற்று வரும் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துவக்க காலத்தில் அட் டெண்டர் என்ற உதவியாளர் பணி யில் இள வயதில் சேர்ந்து, மிகவும் சிறப் பாகவும், ஒழுக்கத்துடனும், நேர்மை - திறமையுடனும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அடக்கமிகு தோழர் ஆறுமுகம் (வயது 90) ஆவார்.

வழக்குரைஞர் தி.பொ. வேதாச்சலம் காலத்திலிருந்து  பணியாற்றி வந்து, புலவர் கோ. இமயவரம்பன் தாளாளராக இருந்த காலத்தில் ஓய்வு பெற்றவர். திருச்சியில் வாழ்ந்து வந்த அவருக்கு இரண்டு மகள்கள், மூத்தவர் சுலோச்சனா -   நாகம்மை ஆசிரியைப் பயிற்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நேற்று (15.2.2021) திருச்சியில் ஆறுமுகம் இயற்கை யெய்தினார் என்பது துயரத்திற்குரிய ஒரு செய்தியாகும். மகள்கள் சுலோச்சனா, வாசுகி ஆகியோர்  உள்ளிட்ட  அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை

16-2-2021

 

Comments