இன்னாசெய்தாரை ஒறுத்தல்!

மோடி அரசின் ஆணி தடுப்புகளுக்கு மாற்றாக பூக்களைப் பரிசளிக்கும் விவசாயிகள்!

புதுடில்லி. பிப். 7 விவசாயி களின் போராட்டத்தை ஒடுக்க, மோடி அரசு சாலைகளில் பதித்த ஆணி தடுப்புகளுக்கு பதிலாக, விவசாயிகளின் சார் பில் பூச்செடிகள் நடப்படுகின் றன.

உத்தரப்பிரதேசம்- டில்லி எல்லையிலுள்ள காசிபூர் பகுதியில், பூச்செடிகள் நடப்படுகின்றன. இப்பகுதியில்தான், காவல்துறையினர் இரும்பு ஆணிகள் கொண்ட சட்டங்களைப் பதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்காக காவல்துறையினர் இரும்பு ஆணிகளை சாலைகளில் பதித்தனர். ஆனால், நாங்களோ, அவர்களுக்காக பூச்செடிகளை நடுகிறோம்'' என்றார் பாரதீய கிசான் யூனியன் (பிகேயு) என்ற வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகெய்ட். பெரியளவில் பூச்செடிகளை நடுவதற்கு விவசாய அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டில்லி--தாபர் திராஹா சாலையில், பூந்தோட்டம் அமைப் பதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்மூலம், சாலையின் ஓரத்தில் ஒதுங்கும் தூசு அழுக்குகள் மறைவதோடு, இப்பகுதியின் சுற்றுச்சூழலும் மேம்பட்டு, நறுமணம் கமழும்'' என்று கூறியுள்ளார் பாரதீய கிசான் யூனியன் (பிகேயு) அமைப்பின் மீடியா தொடர்பாளர் தர்மேந்திர மாலிக்.

Comments