போதைமருந்து கடத்தல்: மேற்குவங்க பாஜக பெண் தலைவர் கைது

 கொல்கத்தா, பிப். 20 போதை மருந்து கடத்தலில் மேற்கு வங்க பாரதீய ஜனதா கட்சி யின் பெண் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பமேலா கோஸ்வாமி என்னும் பெண் விமானப் பணிப் பெண்ணாக பணி புரிந் தவர் ஆவார்.அதன் பிறகு அவர் மாடலாகி தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பாஜகவில் இணைந்தார். இவர் பாஜகவில் இணைவதற்காக பாஜக தலைமை  தனி விமா னத்தை அனுப்பி, அவரை டில்லி பாஜக அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர்.  விரைவில் மேற்குவங்க தேர்தல் நடக்க உள் ளதால் மக்களிடையே பிரபல மானவர்களை இப்படி பெரும் ஆரவாரத்தோடு இணைத்து வருகின்றனர். கட்சியில் இணைந்த பிறகு  ஹூக்ளி மாவட்டத்தின் இளைஞர் அணி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொல்கத் தாவில் முக்கிய சாலையில் இவரது உதவியாளரும், பாஜக இளைஞர் அணி பிரமுகருமான பிரபிர் குமார் டே என்பவருடன் நேற்று (19.2.2021) மாலை தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.  இவர்களுடன் கோஸ்வாமியின் பாதுகாவலரும் உடன் இருந் துள்ளார்.  அப்போது காவல் துறையினர் இவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரிலும் கோஸ்வாமியின் கைப்பையிலும் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கோகைன் என்னும் போதைப் பொருள் சிக்கியுள்ளது. 100 கிராம் அளவுள்ள அந்த போதைப்பொருளின் பன் னாட்டு மதிப்பு இந்திய ரூபா யில் 20 லட்சம் ஆகும். இதை யொட்டி பமேலா, பிரபிர் குமார் மற்றும் பாதுகாவலர் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.  அவர்களை காவல்துறையினர் காவல்நிலை யத்துக்கு கூட்டிச் செல்லும் போது தம்மை வேண்டுமென்றே கைது செய்துள்ளதாக பமேலா கூச்சலிட்டுள்ளார்.   இதை காவல்துறையினர் மறுத்துள் ளனர்.

பமேலா வந்த கார் வெகு நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைசிசிடிவி' மூலம் கண்டதால் நாங்கள் காரை கண்காணித்து வந்தோம். அப்போது ஏற்கெ னவே பன்னாட்டு போதை மருந்து வழக்கில் தொடர்புடைய நபர் என்று நாங்கள் சந்தே கப்பட்டு வரும் நபர்  மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களிடம் எதையோ கொடுத்தார் என்று காவல்துறையினர் கூறியுள்ள னர்.

எனவே, சந்தேகத்தின் பேரில் அந்தக் காரை தொடர்ந்து சோதனை இட்ட போது போதைப் பொருள் கிடைத்ததாகவும் அதன் எடை சுமார் 100 கிராம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.இந்த தக வல் வெளியானதும் பல பாஜக தலைவர்கள் சமூக வலைத் தளங்களில் பமேலாவுக்கு ஆதர வாகப் பதிவிட்டு வருகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சந்தி ரிமா பட்டாசார்யா, “மேற்கு வங்கத்தில் இது  போன்ற நிகழ் வுகள் நடந்ததற்கு நான் அவ மானம் கொள்கிறேன்.  பாஜக வினருக்கு இது புதியது இல்லை''  என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில் பாஜக வின் முக்கிய பிரமுகர் ஒருவர் சிறுமிகளைக் கடத்தி அருகில் உள்ள பங்களாதேசிற்கும், தாய் லாந்திற்கும் பாலியல் தொழி லுக்காக விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார். தற்போது பாஜவின் பிரபல முகம் என்று கூறக்கூடிய ஒருவர் போதை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள் ளார்.

Comments