ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது

சென்னை,பிப்.6- ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு நேற்று (5.2.2021) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:  கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடை பெற்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுப் பூர்வமான போராட்டம். இந்தப் போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகளில் பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே போராடினர்.

இந்தப் போராட்டங்களின் போது, சட்டம்-ஒழுங்கினை பராமரித்திட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. எனினும் சில விரும்பத் தகாத சம்பவங்கள் இந்தப் போராட்டங்களின் போது நடந்து விட்டன. இந்த வழக்கிற்குள் உணர்வுப்பூர்வமாக போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, இந்தப் போராட்டங்களின் போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களை தாக்கியது, தீ வைப்பு போன்ற சட் டப்பூர்வமாக திரும்பப் பெற முடியாத ஒரு சில வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளை, சட்ட வல்லுநர்கள் ஆலோ சனையைப் பெற்று, திரும்ப பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments