வெற்றிகரமாக செவ்வாய்க்கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த தியான்வென்

சீனாவின் தியான்வென்-1 விண்கலம், செவ்வாய் கோளை 22 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து நிழற் படம் எடுத்து வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலையில் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பல கோடி கிலோமீட்டர்கள் பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து விட்டது.

 லேண்டர், ரோவர், ஆர்ப்பிட்டர் என மொத்தம் 5 டன் எடை கொண்ட இந்த விண்கலம் எடுத்துள்ள செவ்வாயின் கறுப்பு-வெள்ளை நிழற்படம், அந்த கோளின்  தரை அமைப்புகளைத் துல்லியமாகக் காட்டுவதாக சீனவின் விண்வெளி  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு மாதம்  செவ்வாய்க் கோளின்  சுற்றுப் பாதையில் பறந்து தரையிறங்கும் பகுதியை ஆய்வு செய்து அதன் பிறகு மெதுவாகச் செவ்வாயின் மெல் பகுதியில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தரையிறங்கும் இடங்களை ஆய்வு செய்ய, உயர் தெளிவுத்திறன் கொண்ட படக்கருவியைப் பயன்படுத்தி  மே மாதத்தில் தரையிறங்குவதற்குத் தயாராகும்.

இதன் தரையிக்கம், ஏழு முதல் எட்டு நிமிடங்கள் நீடிக்கும்  இது தானாகவே தன்னுடைய தரையிறக்கத்தை முடிவு செய்து எவ்வித சேதமும் இல்லாமல் மிகவும் மெதுவாகச் செவ்வாயைத் தொட உள்ளது  இந்த பயணத்தின் மிகவும் சவாலான பகுதியாகும்.

பாராசூட், காற்றுப்பை மற்றும் தரையிறக்க அழுத்த ராக் கேட்டுகள் என மூன்றும் ஒருங்கே இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நின்ற பிறகு தானே எழுந்து நின்று தன்னுடைய முழுமையான ஆய்வுக் கருவிகளை வெளிப்படுத்திச் செயல்படுத்துவது போன்றவை மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகும்.

தரையிறங்கிய பிறகு, குறைந்தபட்சம் 90 செவ்வாய் நாட்கள் (பூமியில் சுமார் மூன்று மாதங்கள்),  ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒவ்வொரு முறையும் அது தகவலைச் சீனாவில் உள்ள தகவல் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்,

தியாவென் -1 என்றால்சொர்க்கத்திற்கான கேள்விகள்மற்றும் பண்டைய சீனாவின் மிகப் பெரிய கவிஞர்களில் ஒருவரான கியூ யுவான் (கிமு 340-278) எழுதிய ஒரு கவிதை வரிகளில் உள்ள பெயர் ஆகும்.

Comments