தென்மாநிலங்களில் அதிக அளவில் உருமாறிய கரோனா வைரஸ் பரவல் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடில்லி,பிப்.20- கரோனா வைரஸ் உருமாறி பரவிவருவதால் அது குறித்து எச்சரிக்கையை அறிவியலா ளர்கள் வெளியிட்டுள்ளனர். என்440கே, 484கே கரோனா, என்501ஒய் உருமாறிய வைரஸ் வகை களில் என்440கே எனும் உருமாறிய வைரஸ் தென்மாநி லங்களில் அதிக அளவில் பரவி வருவதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தெலங்கானாவின் அய்தராபாத் நகரில் அமைந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியியல் மய்யம் சார்பில் கரோனா வைரசின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டன.  கடந்த ஆண்டு இந்தியா வில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக் கைகளாக வெளியிடப்பட்டு உள் ளன. இந்தியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா வைரசின் வகை களை பற்றியும், கரோனா பெருந் தொற்று காலத்தில் அவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது பற்றியும் முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. இதுபற்றி அந்த மய்யத்தின் இயக்குநர் மற்றும் ஆய்வின் தலைவரான டாக்டர் ராகேஷ் மிஷ்ரா கூறும் பொழுது, புதிய வகை கரோனா வைர சுகள் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி அச்சுறுத்தலாக உள்ளன. 

இவற்றில், அதிக பரவல் விகிதங் களை கொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பக் கூடிய வகைகளான, உருமாறிய 484கே கரோனா மற்றும் உருமாறிய என்501ஒய் ஆகிய வைரசுகளும் அடங்கும். எனினும், போதிய அளவு அவற்றின் தொடர்ச்சியை கண்டறி யாமல் விட்டதும் இந்தியாவில் குறைந்த பரவலுக்கு காரணம்.  இந்த வைரசுகள் மற்றும் பிற புதிய வகை வைரசுகளின் ஜீனோம்களின் தொடர்ச்சியை வரிசைப்படுத்தி நாடு முழுவதும் துல்லியமுடன் அடை யாளம் காண வேண்டிய அவசரம் ஏற்பட்டு உள் ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

தென்மாநிலங்களில் என்440கே என்ற வைரசானது அதிக அளவில் பரவி வருகின்றன என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன.  அவற் றின் பரவல் பற்றி முறையாக புரிந்து கொள்வதற்கு நெருங்கிய கண்கா ணிப்பு அவசியம் ஆகிறது.  துல்லிய மற்றும் சரியான தருணத்தில், உரு மாறிய புதிய வகை வைரசுகளை கண் டறிவது அதிக முக்கியத்துவம் வாய்ந் தது.  அடுத்தடுத்து பேரிடர் நிகழாமல் தடுப்பதற்கு அது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

Comments