இரண்டு பேரின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து கொள்ளை - ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி, பிப். 16- இந்தியாவில் தொடர்ந்து 7ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், சமையல் எரிவாயு உருளை யின் விலையும் ரூ.50 உயர்த் தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு உருளை யின் விலை நடப்பு மாதத்தில் மட்டும் ரூ.75-உயர்த்தப்பட்டு உள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.  சமையல் எரிவாயு உரு ளையின் விலை ரூ.50 அதி கரிக்கப்பட்டுள்ளதால் ரூ.785ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

இந்த நிலையில், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதி வில் குறிப்பிட்டுள்ளதாவது, “இரண்டு பேரின் வளர்ச்சிக் காக மக்களிடமிருந்து கொள் ளையடிக்கப்படுகிறதுஎன்று பதிவிட்டுள்ளார். சமையல் எரி வாயு உருளை விலை உயர்வு தொடர்பான செய்தியையும் ராகுல் காந்தி அப்பதிவில் பகிர்ந்துள்ளார்.

Comments