சென்னை - செங்குன்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடம் வெல்லும் சிறப்பு கூட்டம்


செங்குன்றம், பிப். 22- கும்மிடிப்பூண்டி மாவட்டம் புழல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பாக 16.2.21 அன்று செங் குன்றத்தில் 'திராவிடம் வெல்லும்' என்ற சிறப்பு தெருமுனை கூட்டம் புழல் ஒன்றிய தலைவர் வடகரை செகத் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. புழல் ஒன்றிய செயலா ளர் வடகரை உதயகுமார் வரவேற்றார்.  அமைப்பு செயலாளர் பொன் னேரி வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்கரவர்த்தி உரையாற்றிய பின்னர்  சிறப்புரை ஆற்றிய கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வம் பேசும் போது: திமுக மற்றும் அதிமுக-வில் திமுக-தான் திராவிட இயக்கம் அதி முக அல்ல என்று பல்வேறு தரவுக ளுடன் எடுத்துரைத்தார், அதேபோல பாஜக அரசுக்கு அதிமுக ஓர் அடிமை அரசாக செயல்படுவதாக குற்றம் சாற்றினார், விவசாயிகளுக்கு எதி ரான வேளாண் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை விளக்கி பேசினார் முன்னதாக ஓவியர் ஜனாதிபதியின் மகன் பெரியார் பிஞ்சு தமிழ் அரிமா அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பற்றி சிறப்பாக பேசினார். இறுதியாக மாவட்ட இளைஞ ரணி செயலாளர் புழல் இரணியன் நன்றி கூறினார்.

பங்கேற்றோர்:

சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட செயலா ளர் இரா.ரமேஷ், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், மண்டல இளைஞரணி தலைவர் இர.சிவசாமி, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், கும்மிடிப்பூண்டி மாவட்ட  துணைச் செயலாளர் இரவி, கும்மிடிப்பூண்டி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், ஓவியர் ஜனாதிபதி, சோழவரம் ஒன்றிய செயலாளரும், பொதுக்குழு உறுப் பினருமான கஜேந்திரன், பொன்னேரி நகர தலைவர் வே.அருள், பொன்னேரி நகர செயலாளர் சுதாகர், புழல் நகர தலைவர் சோமு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் ராமு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த் திக், பொன்னேரி செல்வி, மாவட்ட மகளிரணி செயலாளர் ச.நதியா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் இளையராணி, இளைஞரணி தோழர் சுகன்ராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் குணகேகர், வடகரை சுகுமார்,  திமுக பேச்சாளர் செங்குன்றம் ஏ. திராவிடமணி, புழல் ஒன்றிய திமுக செயலாளர் ந.ஜெகதீசன், செங்குன்றம் பேருராட்சி தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்ட கலை இலக்கிய மாவட்ட செயலாளர் கா.கு.இலக்கியன், வட சென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், செம்பியம் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், பகுத்தறி வாளர் கழகம் ஆ.வெங்கடேசன், கலைஞர் மன்ற காப்பாளர் கொரட் டூர் கோபால், ஆவடி மாவட்ட செயலாளர் இளவரசு, தென்சென்னை மாவட்ட இளைஞரணி தோழர் பாலமுரளி, வடசென்னை மேனாள் மாவட்ட செயலாளர் தே.ஒளிவண் ணன், தாய்த்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.ப.சீனி வாசன், அருள்நாராயணா, தமிழர் எழுச்சி குரல் மாத இதழின் ஆசிரியர் பத்மநாபன், திமுக மாணவரணி தலைவர் வழக்குரைஞர்  விக்னேஷ் உதயன், திமுக-தொழில்நுட்ப அணி பாலா, வள்ளியூர் ரமேஷ் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments