புதியவகை ஆழ்கடல் உயிரினம் கண்டுபிடிப்பு

அட்லாண்டிக் ஆழ்கடல் பகுதியில் அய்ந்து ஆண்டுகளாக நடந்த தொடர் ஆய்வில்12 புதிய கடல் வாழ் உயிரினங் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே போல் கடற்படுகைகளை மேலும் நவீன கருவிகள் கொண்டு ஆய்வு செய்தால், கடல் பாசிகள், முது கெலும்பில்லாத உயிரினங்கள், பவளப் பாறைகள் போன்ற பல உயிரினங்கள் மேலும் கண்டுபிடிக்கப் படும் வாய்ப்பு உள்ளதென்று ஆழ்கடல் உயிரியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதிகரித்து வரும் கரியமிலம் வளி மண்டலத்தில் கலப்பதால்  அவற்றைப் பெருங்கடல்கள் உறிஞ்சிக் கொள்கின் றன. இதன் காரணமாகப் பெருங்கடல் களில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இதனால் பவளப் பாறைகள் பெரிதும் பாதிக்கப் படுகிறது.

பவளப்பாறைகள் மற்றும் அவை வாழும் இடங்களைப் பாதுகாக்க நாம் விரைந்து செயல்படவேண்டும். இப் போது கூட ஒன்றும் காலம் கடந்துவிட வில்லை என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பவளப்பாறைகளே  பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் புகலிடமாக உள்ளன.

இந்த ஆய்வில்  12 புதிய ஆழ்கடல் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. அதோடு இதுவரை தெரியாத 35 புதிய உயிரினங்களை ஆய்வுக் குழுவாளர் வகைப்படுத்தியுள்ளனர்.

பருவநிலை மாற்றம்: பெருங்கடலின் வெப்பநிலை, பெருங்கடலில் அதிகரிக் கும் அமிலத் தன்மை, ஆழ்கடல் உயிரி னங்களுக்குக் கிடைக்கும் உணவு குறைந்து வருவது போன்ற பல காரணங் களால், வரும் 2100ஆம் ஆண்டுக்குள், ஆழ்கடல் உயிரினங்களின் வாழ்விடங் கள் பெரிய அளவில் குறையும்.

ஆழ்கடலில் புவி மய்யத்தின் வெப்பத்தால், நீர் சூடாகி வெளியேறும் துவாரங்களைத் தான் அய்ட்ரோதெர்மல் வென்ட் என்கிறோம். இதையும் விஞ்ஞானிகள் கடலடியில் கண்டுபிடித்திருக் கிறார்கள். இந்த வெப்ப நீரை வெளியிடும் அய்ட்ரோதெர்மல் வென்ட்கள், பல் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கும், பெருங்கடலுக்கு மத்தியில் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் மிகவும் அவசியமா னவை.

லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெருங்கடல் வேதியியலாளர் பேராசிரியர்கள் ஜார்ஜ், வுல்ஃப். ஆகி யோர் கூறியதாவது: நாம் நிலவின் மேற் பரப்பு செவ்வாயின் தரைதளம் போன்ற வற்றை வகைப்படுத்திவிட்டோம்.

ஆனால் நாம் வாழும் புவியில் உள்ள ஆழ்கடலை இதுவரை பாதியளவு கூட வகைப்படுத்தவில்லை, எப்போதெல் லாம் நீங்கள் கடலின் ஆழமான பகுதி களுக்குச் செல்கிறீர்களோ அப்போதெல் லாம் புதிய உயிரினங்களை மட்டுமல்ல, ஒரு புதிய சூழல் அமைப்பையே கண்டு பிடிக்கிறீர்கள் என்றார்கள்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  பேராசிரியர் முர்ரே ராபர்ட் கூறியதாவது,   அய்ந்து ஆண்டுக்கால ஆய்வில் கடலில் சில முக்கிய பகுதிகளை வரைபடத்தில் கொண்டுவந்துள்ளோம் என்று கூறினார். இவர் இந்த திட்டத்தின் முக்கிய ஆலோசகர் ஆவார்.

கடற்பாசிகள் மற்றும்  பவளப் பாறை களால் பரந்த பல்லுயிர் வாழிடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாழிடங்கள் ஆழ்கடல் நகரங்களைப் போன்றதாகும். அந்நகரங்கள் பல உயிரி னங்களின் வாழ்க்கைக்கு உதவுகின்றன. இந்த இடங்களைத் தான் மீன்கள் முட் டையிடப் பயன்படுத்துகின்றன.

நிலத்தில் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு எப்படி மலைக்காடுகள் அத்தியாவசிய மானவையோ, அதே போல கடலுக் கடியில் இந்த மாதிரியான பவளப் பாறைக் கூட்டங்கள் மிகவும் அவசியமானவை. அதை நாம் பாதுகாக்க வேண்டும்

உலகம் வெப்பமடைந்து கொண்டி ருக்கும் போதும், மனிதர்கள் மீன் வளத் துக்காகவும், தாதுப் பொருட்களுக்காகவும் ஆழ்கடலைச் சுரண்டிக் கொண்டிருக்கும் போதும், பெருங்கடலின் சுற்றுச்சூழல் எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது. என்பதைக் கண்டுபிடிக்க 13 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச் சித் திட்டத்தில் பங்கெடுத்தார்கள்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் சில பகுதிகளில் நீரோட்டத்தின் வேகம் கணிசமாகக் குறைந்திருக்கிறது எனப் பெருங்கடலின் நீரோட்டம் மற்றும் கடற் படுகைகளில் புதைபடிமங்கள் இருப்பை ஆராயும் போது கண்டுபிடித்திருக்கிறார் கள்.

இதனால் ஏற்படும் தாக்கங்கள் மிக வும் சிக்கலானவை. குறிப்பாகச் சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கு மத்தியிலான தொடர்பு குறைந்து வருகிறது  பெருங் கடலின் நீரோட்டங்கள் தான் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உயிரினங்களின் வாழிடங்களை இணைக்கும் பாலம்.

"நாம் பெருங்கடலின் சுற்றுச்சூழலுக்கு என்ன செய்கிறோம், இதனால் நாம் என்ன மாதிரியான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற உண்மையான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். ஆழ்கடல்கள் நம் பார் வைக்கும் நம் அறிவுக்கும் தெரிவ தில்லை".

உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவது, மாசுபாடு அதிகரித்து வருவது போன்றவற்றால், ஆழ்கடலில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் பெருங்கடல் குறித்த அறிவைப் பெறுவது அவசியம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Comments