செய்தியும், சிந்தனையும்....!

என்னதான் நடக்குது நாட்டினிலே?

ஜீரண கோளாறு உள்ளிட்ட 16 மருந்துகள் தரமற்றவை: - மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு.

இதற்கு யார் பொறுப்பு? மருந்தே விஷமானால் யாரிடம் போய் முட்டிக் கொள்வது? சாமியார் ராம்தேவ் வண்ண வண்ண வண்டல்களையெல்லாம் லேகியம் என்றும், மருந்து என்றும் பிரச்சாரம் செய்கிறாரே - யாரும் கண்டுகொள்ளவில்லையே! மாட்டு மூத்திரம்தான் கிருமிக் கொல்லி (Disinfectant) என்று சுற்றறிக்கை விடும் ஓர் ஆட்சியில் என்னதான் நடக்காது!

குழப்பம் குழப்பமே!

போலி நிறுவனங்கள்மூலம் ஜி.எஸ்.டி.யில் ரூ.350 கோடி மோசடி.

மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது - இதே ஜி.எஸ்.டி.யை எதிர்த்து வந்தார் - ‘நீட்'டையும் எதிர்த்தவர்தான்! தொடக்க முதலே ஜி.எஸ்.டி.யில் குழப்பம்! குழப்பமே!

யோசனையா? ஆணையா?

எம்.டெக் படிப்புகளில் இவ்வாண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றலாம் : - அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை

சட்டப்படி நடக்க வேண்டியதற்கு யோசனை என்ன?

இவ்வாண்டு மட்டுமல்ல - எவ்வாண்டும் மாநில அரசின் சட்டம் செயல்பட்டே தீரவேண்டும் என்பதே சட்டத்தின் நிலைப்பாடு!

Comments