ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·   மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத்  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

·   வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அழித்து விடும். அதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சரத் யாதவ் கூறியுள்ளார்.

·  கருநாடகாவில் நீதிபதியாக இருந்த சந்திரகலாவிற்கு மேலும் அரசுப் பதவிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.8 கோடி அளவில் மோசடி செய்த ஜோஷ்யர் யுவராஜ் சாமியார் பண மோசடி வழக் கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல் பல அரசியல்வாதிகளி டம் ரூ. 80 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

·  மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்விக்கான  நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, திறமையான பள்ளிகளை உருவாக்குவோம் என்பது மாணவர்களிடையே இடைவெளியை அதிகப்படுத்தும் என பேராசி யர் திஷா நிவானி கருத்திட்டுள்ளார்.

தி டெலிகிராப்:

·     மோடிக்குப் பிறகு பிரதமராகும் வாய்ப்பு அமித் ஷாவை விட .பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு உள்ளது. அவ்வாறு நடந்தால், யோகி, மோடியின் மாடலாக இருப்பார். மோடியின் குஜராத் மாடல், ஏழு ஆண்டுகள் குடியரசின் சமூக மற்றும் அனைத்து அமைப்புகளையும் ஆழமாக சேதப்படுத்தியுள்ளன. யோகியின் .பி. மாடல், அய்ந்தாண்டுகளில் அனைத்து அமைப்பு களையும் முழுவதுமாக அழிக்கக்கூடும் என வரலாற்றாசிரியர் ராம்சந்திர குகா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

· ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இருவர்மீது கருநாடக காவல் துறை பதிவு செய்த முதல் குற்றப்பத்திரிகையை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நாட்டில் அதிகரித்து வரும் ஜாதி மற்றும் வகுப்புவாத பதற்றங்களைக் குறைப்பதற்கு இதுபோன்ற திருமணங் கள் முன்னோக்கிய வழி என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

- குடந்தை கருணா

13.2.2021

Comments