செய்தியும், சிந்தனையும்....!

புளித்துப்போன வார்த்தைகள்

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அச்சம் தேவையில்லை : - விவசாயிகளுக்குப் பிரதமர் உத்தரவாதம்.

கேட்டுக் கேட்டு மக்களுக்குப் புளித்துப் போய்விட்டது. வேறு ஏதாவது உருப்படியான முடிவு தேவை!

யார் சதியாளர்?

.தி.மு..வைக் கைப்பற்ற சதி! : - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

நீண்டகாலமாக பா...தான் அதைச் செய்துகொண்டு இருக்கிறது - காலந்தாழ்ந்துதான் முதலமைச்சர் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார் போலும்!

எது முக்கியம்?

ஆண்டுக்கு இருமுறைநீட்' தேர்வு.

எத்தனை முறைநீட்' தேர்வு என்பது முக்கியமல்ல - ‘நீட்'டே தேவையில்லை என்பதுதான் மக்களின் முடிவு. எத்தனை முறை சொன்னாலும் - இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளாதது போல நடிக்கிறது என்பதுதான் உண்மை - காரணம், இது உயர்ஜாதிக்காரர்களுக்காக கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் அரசு.

குடைச்சலுக்கே! 

ஆளுநர் கிரேண்பேடியைத் திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குடியரசுத் தலைவரிடம் புகார் மனு.

குடைச்சல்களை சதா கொடுத்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே ஆளுநராக கிரண்பேடியை மோடி அரசு நியமித்திருக்கிறது.

 

Comments