'கோவிட்'டை விடக் கொடிய நோயை எதிர்கொள்ளத் தயாராகும் மனித இனம்?

எபோலா வைரசைக் கண்டுபிடித்த மருத்துவர் தற்போது ஒரு புதிய செய்தியைக் கூறியுள்ளார். அவர் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசைப் போலவே புதிய கொடிய நோய் x உலகத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இது ஆப்பிரிக்க வைரசைப் போலவே கொடியது. இதுவும் மனிதக் குலத்தை ஆட்டிப்படைக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டில் எபோலா வைரசைக் கண்டறிய உதவிய பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே தம்பும், மனிதகுலம் இதுவரை அறியப்படாத புதிய வைரிகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி யுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறு கையில் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மலைக்காடுகளில் இருந்து புதிய மற்றும் அபாயகரமான  வைரஸ்கள் உருவாகின்றன என்று அவர் கூறியுள்ளார்,. நாம் இப்போது புதிய நோய்க்கிருமிகள் உலாவும் உலகில் இருக்கிறோம். இதுவே மனிதக்குலத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். இனி வருகின்ற எதிர் கால தொற்றுநோய்கள் கோவிட்-19அய் விட மோசமாக இருக்கக்கூடும் என்றும், மேலும் பரவும் சூழ்நிலை வேகமாக இருக் கக்கூடும் என்றும் தான் கருதுவதாகப் பேராசிரியர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து காங்கோ ஜனநாய கக் குடியரசான இன்ஜெண்டில், பெயரிடப் படாத ஒரு நோயாளி ரத்தக்கசிவு காய்ச்ச லின் ஆரம்ப அறிகுறிகளைக் காண்பித்தார் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அப்போது நோயாளிக்கு எபோலா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் நோய் x ஆக இருக்கும் என மருத்துவர்கள் அஞ்சி வருகின்றனர்.

முடிவுகளும் எபோலோ வைரசுக்கு எதிர்மறையாக வந்து உள்ளன. இந்த புதிய நோய்க்கிருமி கோவிட் 19 போலவே வேக மாகப் பரவக்கூடும் என்றும், எபோலாவின் 50 முதல் 90 சதவீதம் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

நோய் ஜ் என்பது கண்டுபிடிக்கப்படாத ஒரு விஷயம். இது உலகெங்கிலும் அழி வுக்கு வழி வகுக்கும் என்று கூறுகின்றனர். இதற்காகப் பேராசிரியர் ஒரு அறிய முடி யாத நோயால் பாதிக்கப்பட்டவர்களிட மிருந்து முதல் இரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் ஒரு இளம் ஆராய்ச்சியாளராகஇருந்தபோது எபோலா என்று பெயரிட்டார். இந்த நோய் ரத்தக்கசிவை ஏற்படுத்தியது மற்றும் "யம்புகு குறிப்பணி" மருத்துவமனையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது சுமார் 88% நோயாளிகளையும் 80% ஊழி யர்களையும் அது கொன்றது.

எடுத்த இரத்த மாதிரிகளை பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பினர், அங்கு விஞ்ஞானிகள் புழு வடிவ வைர சைக் கண்டுபிடித்தனர்.

பேராசிரியர் இன்னும் பல விலங்குகளி லிருந்து மனிதர்களிடம் பரவும் ஜூனோடிக் நோய்களைப் பற்றி எச்சரித்தார். மஞ்சள் காய்ச்சல், பல்வேறு வகையான இன்ஃப்ளூ யன்ஸா, ரேபிஸ் மற்றும் லைம் நோய் ஆகி யவை விலங்குகளிடமிருந்து மனிதர்க ளுக்கு, பெரும்பாலும் கொறித்துண்ணிகள் அல்லது பூச்சிகள் வழியாகச் சென்று, மனிதர்களுக்குத் தொற்று நோயை ஏற் படுத்தியுள்ளன. வளர்ந்து வரும் வைரஸ் களின் எண்ணிக்கை பெரும்பாலும் விலங் குகளின் வாழ்விடங்கள் மற்றும் வன விலங்கு வர்த்தகத்தின் அழிவின் விளை வாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் மறைந்து போகும்போது, எலிகள், வவ் வால்கள் மற்றும் பூச்சிகள் போன்ற விலங் குகள் பெரிய விலங்குகள் அழிக்கப்படும் இடத்தில் வைரஸ்கள் உயிர்வாழ்கின்றன.

SARS, MERS  மற்றும் Covid-19 வைரஸ் அனைத்தும் மனிதர்களிடம் பரவிய கரோனா வைரஸ்கள்.  இவை சீன  வவ்வால் களில் தோன்றியிருக்கலாம், என்று கருதப் படுகிறது.

Comments