கோவிந்த பன்சாரே நினைவு நாளில் சூளுரை புதுப்பிப்போம்...!

மராத்தியத்தின் பகுத்தறிவு வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான கோவிந்த பன் சாரே அவர்களது நினைவு நாள் இன்று (பிப்.20).

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே நாளில் வழக்குரைஞர் ‘‘தோழர்'' கோவிந்த பன்சாரே தமது துணைவியாருடன் (உமா) நடைபயிற்சி சென்று கொண் டிருந்தபோதுமர்ம' நபர்கள் இருவர் அவரை சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிவிட்டனர். அவர் துணைவியார் காயமடைந்தார்.

மராத்தியத்தில் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கருநாடகத்தில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களை ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டு சுட்டுக் கொன்றன. இதில்சனாதன் சன்ஸ்தா', சங் பரிவார் அமைப்புகளுக்குள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது!

தீவிரவாதம், பயங்கரவாதம் எப்படி? யாரால்? பரப்பப்படுகிறது  என்பதற்கு இத்தனை பகுத்தறிவுவாதிகளின் படுகொலைகள் தக்க சான்று பகருகின்றன!

அந்த உயிர்த் தியாகிகளின் ரத்தம் புதிய புரட்சியை அறவழியில் ஏற்படுத்தி, மதச்சார்பற்ற பகுத்தறிவு சமூகத்தை படைக்கும்.

கோவிந்த பன்சாரே நினைவு நாளில் சூளுரை புதுப்பிப்போம்!

 

 கி.வீரமணி

புரவலர்

பகுத்தறிவாளர் கழகம்

சென்னை

20.2.2021

Comments