பிப்ரவரி மாத நினைவுகள்

கல்பனா சாவ்லா

 பிப்ரவரி மாதம் முதல் நாள் பெண்களை உலகம் முழு வதும் உள்ள மக்கள் பாராட்டிப் போற்றும் ஒரு நாள். இந்நாள் நாம் பெருமை கொள்ள வேண்டிய நாளென்றாலும், ஒரு பேரி ழப்பை விலையாகத் தந்து பெற்ற பெரு மையாகிவிட்டது. கல்பனா சாவ்லா எனும் இந்திய வம்சாவளிப் பெண்மணி விண் வெளியில் பறந்த உலகின் முதல் பெண்மணி என்கிற வரலாற்றுச் சிறப்பைத் தந்து சென்றுவிட்ட நாள். 2003ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் அமெரிக்கா வில் காலை 8.00 மணி. இரண்டு லட்சம் அடி உயரத்தில் கொலம்பியா விண்கலம் மணிக்கு 20,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிற நேரம். பதினைந்து நிமிடங்களில் பரபரப்பான சூழ்நிலையில் கல்பனா பயணித்த விண் கலம் பத்திரமாக கென்னடி விண்வெளி  மய்யத்திற்கு வந்துவிடும் என்ற நம்பிக் கையோடு மக்கள் காத்திருக்கிறார்கள். திடுமென்று அந்த விண்கலம் கட்டுப் பாட்டை இழந்து இலக்கைவிட்டு விலகிப் பயணித்த சற்று நேரத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் தீப்பிழம்பாய்ச் சிதறிவிழ, கல் பனா உடல்கருகிச் சாம்பலானார். வீரப் பெண்மணி விண்ணிலேயே கரைந்து கலந்துவிட்டார். கல்பனா சாவ்லா விண் ணில் 760 மணி நேரம் பறந்திருக்கிறார். அவர் பறந்து பயணித்த தூரம் 104 லட்சம் கி.மீ. பூமியை அவர் 252 முறை சுற்றியிருக் கிறார். இது இன்றளவும் உலகப் பெருஞ்சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி 3. அறிஞர் அண்ணாவின் மரணம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். எளிமையாகவும், நேர்மை யாகவும் வாழ முடியும் என்று அவருக்கு முன்னம் வாழ்ந்த கர்மவீரர் காமராசர் போலத் தானும் வாழ்ந்து காட்டியவர் அறிஞர் அண்ணா .

திராவிட முன்னேற்றக் கழகம் பெரு வாரியான வாக்குகள் வித்தி யாசத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலைக்கு வந்து முதல் வரானவர். தந்தை பெரியாரை சில மனக் கசப்புகள் காரணமாக விட்டு விலகி வேறு கட்சி தொடங்கியபோதும் அவரை விமர் சனம் செய்யாது அரசியல் நாகரிகம் காத்தவர் அறிஞர் அண்ணா . பெரியாரைத் தவிர தமக்குத் தலைவரில்லை என்று தலைவர் பதவி இல்லாமலேயே தாம் வாழ்ந்த காலம்வரை திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்தியவர் அவர். மாற்றுக் கட்சியினரையும் மதித்த மாமனிதரான அவர், நாகர்கோவில் தொகுதியில் கர்ம வீரர் காமராசர் போட்டியிட்டபோது, கழகத் தின் சார்பாக யாரும் அவரை எதிர்த்து நிற்கக் கூடாதென்று தடை போட்டவர். சென்னை மாகாணத்தைத் 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்தார். சுயமரி யாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வ மாக்கினார். தமிழ் ஆங்கிலம் என்று தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை உறுதிப் படுத்தினார். சொல்லிச் சொல்லிப் பெருமையுற எண்ணற்ற செய்திகளையும், சாதனைகளையும் வரலாறாக்கியவர் அறி ஞர் அண்ணா . அவரை மரணம் தழுவிய செய்தியறிந்த அப்போதிருந்த 4.5 கோடித் தமிழர்களில் ஏறத்தாழ ஒன்றரை கோடி மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தியது ஓர் உலக கின்னஸ் சாதனையாகப் பதிவாகியுள்ளது.

உலகப் புற்றுநோய் எதிர்ப்பு நாள்

உலகில் புற்றுநோயால் இன்னமும் சாவின் எண்ணிக்கை அதிகரித்த வண்ண மிருக்கிறது. கட்டுப்படுத்தலாம், பூரணமா கக் குணமாக்கலாம் என்று அதனை எதிர்த்த போராட்டம் இன்னமும் தொடர் கிறது. புற்றுநோய்க்கான காரணம் 'சிலவற் றைக் கூறி, ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு மேலோங்கியிருப்பதுடன், பாதிக்கப்பட்டோரிடம் பரிவு காட்டும் சமூக அக்கறையையும் பல அமைப்புகள் காட்டி வருவது பாராட்டிற்குரியது. பிப்ரவரி 4ஆம் நாள் உலகப் புற்று நோய் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் உலகெங்கும் 13 சதவிகித மக்கள் மரணத் தைத் தழுவுகிறார்கள். தற்போது சுமார் 15 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். உலகப் புற்று நோயாளிகளில் 40 சதவிகிதம் பேர் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்கிறார்கள். இந்தியா வில் மட்டும் 12 லட்சம் புற்று நோயாளிகள் உள்ளனராம். உடல் பருமன், மது அருந் துதல், புகையிலைப் பயன்பாடு, கிருமித் தொற்று, அபரி மிதமான வெயில், நச்சு வாயுக்கள், உடற்பயிற்சி இன்மை போன் றவை புற்றுநோய் வருவதற்கான சில காரணங்கள். நாம் உட்கொள்ளும் உணவுப் பொருளில் மஞ்சள், இஞ்சி சேர்த்துக் கொள் வது புற்றுநோய் செல்களை அழிக்கிற தென்கிறார்கள். பச்சைத் தேயிலை பரு கினால் புற்றுநோயின் தாக்கம் சற்று குறைகிறதாம். புற்றுநோய் இல்லாத நாடாக, நம்மில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

.. சிதம்பரம்

'கப்பலோட்டிய தமிழன்' என்றதும் நமக்கு, .. சிதம்பரனார் நினைவு வந்துவிடும். ஆனால், அவர் தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியது. பிப்ரவரி 9 அன்று என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ..சி.யை மட்டுமல்ல, இந்த நாளையும் நாம் நினைவிலிருத்திக் கொள்வோம்.

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவணர் தமிழின் மிகச் சிறந்த அறிஞர் பெருமக்களில் ஒருவர். மறைமலை அடிகளாரை நினைக்குந் தோறும் அவரோடு சேர்த்தெண்ணச் செய்யும் சிறப்பினுக்குரிய தேவநேயப் பாவாணர் அவர்கள் நெல்லை மாவட்டத் துக்காரர். இயற்பெயர் ஞானமுத்து. தேவ நேயன் என்று புனைபெயர் கொண்ட ஞான முத்து, தமக்கு வழங்கப்பட்ட 'கவிவாணர்' என்ற பட்டத்தைத் தூய தமிழில் பாவாணர் என்றாக்கிக் கொண்டதால் தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார். தமிழாசிரியராகப் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிய பெருமைக் குரியவர். திருவல்லிக்கேணி 'கெல்லட்' உயர்நிலைப் பள்ளி, பாரிமுனை கிறிஸ்தவப் பள்ளி, மன் னார்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி ஆகிய பள்ளிகளில் பணியாற்றியுள்ளார். ஆம்பூரில் பணி யாற்றிக் கொண்டிருந்தபோது மதுரைக் கல்விக் கழகத்தின் பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றார். ஒப்பியல் மொழிநூல், திராவிடத் தாய், தமிழாக்க விளக்கம், இயற்றமிழ் இலக்கணம், தமிழர் வரலாறு போன்ற சிறப்பான நூல்களோடு 37 நூல்கள் எழுதியிருக்கிறார். திராவிட மொழி களுக்கு மட்டுமல்ல, வடமொழிக்கும் தமிழே மூலமொழி என்பதைத் தம் ஆய்வுகளால் உறுதிப் படுத்திய பெருமை தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு உண்டு. மொழி யின் சிறப்பிற்குப் புது வெளிச்சம் பாய்ச்சிய அவரை 'மொழி ஞாயிறு என்று தமிழுலகம் நினைவிலேந்திப் பாராட்டி மகிழ்கிறது. இவ்வறிஞரைத் தமிழகம் பிப்ரவரி ஏழில் பெற்றது இம்மாதச் சிறப்பு களில் ஒன்று.

கலைஞர் - எம்ஜிஆர்

அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் 1969இல் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராகப் பதவியேற்றதும் தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக எம்ஜிஆர் பதவியேற்ற தும் பிப்ரவரி 10இல் அமைந்தது சிறப்பு.

தமிழில் முதல் நூல்

புத்தக உலகில் ஒரு புரட்சி எனலாம். நம்மில் எத்தனை பேருக்குத் தமிழில் வெளியான முதல் புத்தகம் எது என்று தெரியும்? தமிழில் முதல் நூல் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் வெளியாகி யிருக்கிறது. இந்நூலை வின்சென்ட் நாச ரேத் என் பவர் இரு கிறிஸ்தவத் துறவிக ளுடன் இணைந்து எழுதி வெளியிட்டு உள்ளார். இந்நூல் சில அய்ரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது. தமி ழிலிருந்து ஆங்கிலத்துக்கு பெயர்க்கப்பட்ட முதல் நூலும் இதுதான். 'ஏசு கிறிஸ்து நாத னவர்' என்பது நூலின் பெயர்.

உலக வானொலி நாள்

2011இல் பிப்ரவரி 11ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவிக்கப்பட்டு விட்டது. 2012 பிப்ரவரி 13 அன்று இத்தாலியின் பைசா நகரில் வானொலி நாள் முதலில் கொண்டாடப் பட்டது. 1930க்கு முன் இந்தியாவில் 245 தனியார் ஒலிபரப்பு நிலையங்கள் இருந்தனவாம். 1930இல் ஆங்கில அரசு அவற்றை ஒருங்கிணைத்து "ஆல் இந்தியா ரேடியோஎன்று அறி வித்தது. 1977இல் பண்பலை ஒலிபரப்பும் கூடுதலாகச் சேர்ந்து கொண்டன. 27 மொழிகளில் இப்போது நாம் ஒலிபரப்பு செய்துகொண்டிருக்கிறோம். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், இசைவாணர்கள் பலருக்கு அறிமுகமும், வளர்த்துவரும் பெரும் பணியையும் வானொலி செய்து வருகிறது.

காதலர் தினம்

பிப்ரவரி மாதத்தில் உங்களுக்குப் பளிச்சென்று நினைவுக்கு வரும் நாள் என்பதோடு மிகவும் பிடித்த நாள் எது என்று எந்த இளைஞனைக் கேட்டாலும் "காதலர் தினம்” (வேலன்டைன் டே) என்று மலர்ந்து மொழிவான். இளமை ததும்பும் இனிய நாளிது. அதிகமாக வாழ்த்து அட்டைகளும், வாடாத ரோஜா மலர்களும் பகிரப்படுகிற நாள் இந்த நாள். காதலி இருக்கிறாளோ இல்லையோ, காதலன் கிடைத்தானோ இல்லையோ... காதல் மட்டுமாவது கனவாக இருக்கிற உலகப் புகழ்பெற்ற நாள் இந்நாள். இளைஞர்தம் இதயத்துள் புகுந்த நாளும் இதுதான். இந்த நாளை ஒரு கிறிஸ்தவ சாமியார்தான் கண் டெடுத்திருக்கிறார். சாமியாருக் கும் இந்த சந்தோஷ நாளுக்கும் என்ன சம்பந்தம்?

கி.பி. 260களில் ரோம் நகரில் படை வீரர்கள் யாரும் திருமணம் செய்து கொள் ளக் கூடாது என்று அந்நாட்டு மன்னன் இரண்டாம் கிளாடியஸ் உத்தரவு போட்டி ருந்திருக்கிறான். அதைமீறி அரசருக்குத் தெரியாமல் பல படைவீரர்களுக்கும் அவர்களை விரும்பிய இளம்பெண்களுக் கும் வாலன்டைன் என்ற பாதிரியார் ரகசி யமாகத் திருமணம் செய்து வைத்திருக் கிறார். வேலன்டைன் சாமியாரை கி.பி. 269 பிப்ரவரி 14ஆம் நாள் மன்னன் மரண தண்டனைக்கு உட்படுத்துகிறான். காதலர் களுக்காகப் போராடித் தன்னுயிர் நீத்த வாலன்டைன் பாதிரியார் மறைந்த நாள் காதலர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

பன்னாட்டு சமூகநீதி நாள்

தொடர்ந்து வரும் பிப்ரவரி 20 கூட சமூகம் சார்ந்த ஒருநாள். பன்னாட்டு சமூகநீதி நாள் 2007ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ஆம் நாளை உலக சமூகநீதி நாளாகக் கொண்டாட வேண்டு மென்று அறிவித்தது. அதன் அடிப்படையில், 2009ஆம் ஆண்டு முதல் உலக சமூகநீதி நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சமூக நீதியும், மனித உரிமைகளும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. மனிதர்களின் அடிப்படை உரிமையான சுதந்திரம், பாரபட்சமற்ற நீதி போன்றவை இந்நாளில் பெரிதும் வலியுறுத்தப்படும். உலக மக்களில் 200 மில்லியன் மக்களுக்கு வேலை இல்லை. இவர்களில் 80 மில்லியன் இளைஞர்கள். வேலைவாய்ப்பு பெற்றவர்களில்கூட 630 மில்லியன் மக்களுக்குப் போதிய வருவாய் இல்லை. ஏழைகளுக்கும், பணக்காரர்க ளுக்கும் இடையிலான இந்தப் பெரிய இடைவெளி குறைக்கப்பட வேண்டும். சமூக நீதிப் பிரச்சினைகளிலும் இடைவெளி அதிகமாகி வருகிறது. மனிதர்களுக் கிடை யிலான இந்த வேறுபாடுகள் களையப்பட மனித மனங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அப்போதுதான் சமூகநீதியை உறுதிப்படுத்த முடியும்.

உலகத் தாய்மொழி நாள்

உலகெங்கும் தாய்மொழி குறித்த ஆர்வமும், ஈடுபாடும் மிகுந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தாய் மொழிப் பற்று மனத்திலிருந்தாலும், 1999 ஆண்டு யுனெஸ்கோ அறிவித்த பிறகுதான் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிந்தனை யுனெஸ்கோவுக்கு எப்படி வந்தது? 1952 ஆம் ஆண்டு வாக்கில் இன்று வங்கதேச மாக இருக்கும் கிழக்கு பாகிஸ்தானின் தலைநகர் டாக்காவில் மேற்கு பாகிஸ் தானியர்கள் உருது மொழியை எதிர்த்தும், வங்கமொழியை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்ற வேண்டுகோளை வைத் தும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர். அவர்களின் நினைவாக அவர்கள் இறந்த பிப்ரவரி 21ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாட வேண்டுமென யுனெஸ்கோ தீர்மானித்தது. உலகமொழிகளில் பேச்சு வழக்கில் இருக்கும் மொழிகள் ஏழாயிரத் துக்கும் அதிக மானவை. எல்லா மொழி களிலும் மூத்ததும் முதன்மையானதுமான தமிழ் மொழியின் சிறப்பை தமிழர்களி லேயே பலர் அறியாதிருப்பது வருத்தத்திற் குரியது. கலப்பில்லாத தூய தமிழ் பேசு வதும், தமிழிலேயே தமிழனுடன் பேசுவதும் தமிழ்ப் பண்பாடுகளைப் பேணுவதும் தமிழர்களின் தலையாயக் கடமையாக இருத்தல் வேண்டும் என்கிற உறுதியை இந்த உலகத் தாய்மொழி நாளில் நாம் தலையிலேற்றிக் கொள்ள வேண்டும்.

தில்லையாடி வள்ளியம்மை

தீரம்மிக்க பெண்கள் இந்தியாவில் சிலர் பிறந்ததாலும் தில்லையாடி வள்ளியம் மையால் பிப்ரவரி மாதம் சிறப்பிற்குரியது. தில்லையாடி வள்ளியம்மை தென்னாப் பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய அறப் போரில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததோடு, நோயுற்று இறந்த தியா கப் பெண்மணி அவர். நாகை மாவட்டத் தைச் சேர்ந்த ஓர் ஏழை நெசவாளியின் மகள் அவர். அவரது தந்தை பிழைப்புத் தேடி ஆப்பிரிக்கா சென்றிருக்கிறார். வள் ளியம்மை ஆப்பிரிக்காவில் தான் பிறந்தார். தென்னப்பிரிக்க உச்சநீதிமன்றம் கிறிஸ்தவ முறைப்படிச் செய்யாத எந்தத் திரு மணமும் செல்லாது என்ற தீர்ப்பை வழங்க, இந்தி யர்கள் பலர் நாடு திரும்ப நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்தியர்களின் உரிமை மீட்புக் காக காந்தியடிகள் போராடியபோது அவ ருடன் இணைந்து போராடிய வள்ளியம்மை தன் 16 வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

உடல்நிலை மோசமானதும் விடுதலை செய்யப் பட்டார். விடுதலை செய்யப்பட்ட 11ஆவது நாள் 22.2.1914இல் அவர் இறந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் தில்லை யாடியில் சிலை நிறுவப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் கோஆப்டெக்ஸின் 600ஆவது விற்பனை நிலையத்துக்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்று பெயர்சூட்டப்பட்டு உள்ளது. தென் னாப்பிரிக்கா வின் ஜோஹன்ஸ்பர்க்கிலும் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. அங் குள்ள தமிழர் அமைப்பு கள் அவர் பெயரால் விருதுகள் வழங்கி வருகிறார்கள்.

இன்னும் பல சிறப்புகள்

பிப்ரவரி மாதத்திற்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. உலகச் சாரணர் தினம் (22.02), உலக அமைதி நாள் (23.02), பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்ட நாள் (24.02) டாக்டர் ராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (28.02) தேசிய அறிவியல் தினம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த நாள் பிப்ரவரி 29. லீப் ஆண்டுகளுக்கு மட்டுமே 29 நாள்கள். மற்ற ஆண்டுகளில் 28 நாள்கள் மட்டுமே. ஆகவே, மொரார்ஜி தேசாய் அவர் களின் பிறந்த நாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாட முடியும்.

Comments