திருப்பந்துறை பி.ஜோசப் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

குடந்தை, பிப். 14- குடந்தை கழக மாவட்டம், திருப்பந்துறை பெரியார் பெருந்தொண்டர் பி. ஜோசப் அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சி 6-2-2021 சனிக் கிழமை, காலை 11.00 மணியள வில்  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் கலந்துகொண்டு திருப் பந்துறை கிளை கழகத்தின் சார்பில் கடைவீதியில் அமைக் கப்பட்டிருந்தபி.ஜோசப் அவர் களின் நினைவுக் கல்வெட் டினை திறந்து வைத்தும், கழகக் கொடியினை ஏற்றியும், படத் தினை திறந்து வைத்தும் வீர வணக்கம் செலுத்தி நினை வேந்தல்  உரையாற்றினார். 

நிகழ்ச்சிக்கு மாவட்டத தலைவர் கு.நிம்மதி தலைமை ஏற்றும் தஞ்சை மண்டல செய லாளர் .குருசாமி  பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் குழந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன் குடந்தை பெருநகர செயலாளர் பீ.ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் வே.கோவிந்தன்,  மாவட்ட துணைச் செயலாளர் .தமிழ் மணி,  மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் எம். திரிபுரசுந்தரி, மனிதநேய மக்கள் கட்சி  மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜ்முகமது, மக்கள் நல கூட்டணி சாத்தை யன் ஆகியோர் முன்னிலை யேற்றும் திருவிடைமருதூர் ()ஒன்றிய செயலாளர் .முரு கானந்தம் ஒன்றிய அமைப்பா ளர் .சிவக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர் வே.குண சேகரன் பெரியார் கூட்ட மைப்பு சோலை.மாரியப்பன் திருப்பந்துறை ஊராட்சி மன்ற தலைவர் சரோஜா சுந்தர், திமுக கிளை கழக செயலாளர் .அறிவழகன் ,அதிமுக கிளைச் செயலாளர் .பீட்டர், முன் னாள் ஊராட்சி மன்ற தலை வர் சோ.பாண்டியன் ,திமுக ஊராட்சி செயலாளர் கோ.பக் கிரிசாமி, அதிமுக ஊராட்சி செயலாளர் கா.கோவிந்தராஜ், பொதுவுடமை இயக்கம் . செல்வம்,.கனகராஜ் ஆகி யோர் கலந்துகொண்டு நினை வுரையாற்றினர்.

நிகழ்ச்சியில் நாச்சி யார்கோயில் சுதன்ராஜ்கரிகா லன், ஆசைத்தம்பி, முத்துக் குமார், வலங்கை தினேஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர். வருகைதந்தோரை திரு விடை மருதூர் (தெ) ஒன்றிய செயலா ளர் .சங்கர் வரவேற்றும் ஜோ.செல்வேந்திரன் நன்றியும் கூறி உரையாற்றினார். ஊர் பொதுமக்களும், இளைஞர் களும் திரளாக கலந்து கொண்டனர்.

Comments