நண்பர் பழ.கருப்பையாவின் துணைவியார் திருமதி கமலம் ஆச்சி மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

சிறந்த சிந்தனையாளரும், திராவிட இன உணர்வாளருமான இலக்கியவாதி நண்பர் பழ.கருப்பையாவின் துணைவியார் திருமதி கமலம் ஆச்சி அவர்கள் இன்று (14.2.2021) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

சில காலமாகவே உடல் நலக்குறை வுற்று சிகிச்சையில் இருந்தார்; அப்போது கூட நண்பர் பழ.கருப்பையா அவர்களிடம் நலம் விசாரித்து வந்தோம்.

அவரது இழப்பில் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள அவருக்கும், அவரது குடும்பத்தவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

14-2-2021

Comments