கடந்த அய்ந்தாண்டுகளாகப் பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம்: கபில்சிபல் சாடல்!

புதுடில்லி. பிப்.11 காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பாஜகவை நாடா ளுமன்றத்தில் கடுமையாக விமர்சித் துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. எப்போதுமில்லாத அளவு இம்முறை மத்திய அரசை நோக்கி பாஜகவின் முன்னாள் கூட் டணிக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வருகின்றன. மோடி யும் இந்த விமர்சனங்களுக்கு ஊடகங் களில் முக் கியத்துவம் கொடுக்காமல் இருக்க, நாள்தோறும் அழுது கண்ணீர் விட்டு, நா தழுதழுக்க பேசியும் வரு கிறார்.

  இந்த விவாதத்தில் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் நேற்று (10.2.2021) மாநிலங்களவையில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

முன்பு காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்ததாக பா... குற்றம் சாட்டியது.  அதையே இந்தாண்டு தேர்தலைச் சந்திக்க உள்ள மாநி லங்களுக்கு உள்கட்டமைப்பு திட் டங்களை வழங்கி பா...வும் செய் துள்ளது. நீங்கள் 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள். எனவே, இனியும் சாக்குப் போக்குகளை ஏற்க முடியாது.

பாஜக அரசு நாட்டின் வளங்களை நான்கைந்து பெரிய ஆட்களுக்கு வழங்குகிறது. இந்த நடவடிக்கை,அரசு அதிகாரிகள், அரசு எந்திரம் போன்ற வற்றை தொழிலதிபர்களின் நலனுக் காக பயன்படுத்தி  சலுகைகளை வாரி வழங்கி அவர்களின் வளங்களைப் பெருக்கிக் கொள்ளும் நிலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

ஆனால், நாடு வளம் பெற குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் தன்னிறைவு அடைய வேண்டும்.  நாட்டில் கடந்த அய்ந்து ஆண்டுகளாகப் பொருளா தாரத்தில் தவறான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போதைய  ஆண்டில் முதலீடு களை விற்கும் இலக்கு 15 சதவிகிதம் மட்டுமே பூர்த்தியாகியுள்ளது. பணி இழப்புகளைப்பற்றி அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை. தற் போதைய கரோனா சூழலில் 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அதே வேளையில் நூறு நாள் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறை ரூ.8.55 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது.  அரசு சார்பில்  தொலைத் தொடர்பு துறைக்கு எந்த நிவாரணமும் அளிக் கப்படவில்லை.  அத்துடன் விவசாயிகள் நல நிதி ரூ.10 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் வாக்கு வங்கி அரசியல் இல்லை எனக் கூறும் மோடி, ஏன் தமிழகம், மேற்கு வங்கம், கேரளாவுக்குச் சிறப்புத் திட்டங்களை அளித்துள்ளார். நிதிநிலை அறிக் கையில் வாக்கு வங்கியும் நிதிநிலை அறிக்கைக்கு வெளியே நோட்டு வங்கி அரசியலும் உள்ளதா'' என கபில்சிபல் கேள்வி எழுப்பினார்.


Comments