ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியா உள்ளிட்ட வெளி நாடு வாழ் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய விசா மசோதா வினை அமெரிக்க அதிபர் ஜோபைடன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது..

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சிறிய ஜாதிகளை ஒருங்கிணைத்து தமிழ் நாட்டில் காலூன்ற பாஜக முயற்சி எடுக்கிறது.

·     ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்திட இந்தியா வலுவுடன் தனது ஜனநாயகத்தைக் காத்து செயல்பட உலக நாடுகள் நினைக்கின்றன. அவசர நிலைக் காலத்தில் உலக நாடுகளின் ஊடகங்கள் இந்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன என  ஆராய்ச்சியாளர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முனைவர் பிரத்தினவ் அனில் இணைந்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

தி டெலிகிராப்:

·     ஆர்.எஸ்.எஸ்.-சின் இரண்டாவது தலைவராக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர், அறிஞர் மற்றும் குறிப்பிடத்தக்க தலைவர் என  மத்திய கலாச்சாரத் துறை விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தான் வெட்கித் தலைகுனிவதாக முன்னாள் கலாச்சார செயலாளர் ஜவஹர் சிர்கார் கூறியுள்ளார்.

·     பெட்ரோல், எரிவாயு விலை ஏற்றத்தைக் கண்டித்து ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடியைவரி-ஜீவிஎன வர்ணித்துள்ளது.

·     வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில், மாதிரி வேளாண் சட்டத்தை அகில இந்திய கிசான் சபா வெளியிட்டுள்ளது. இந்த மசோதா வேளாண் விளைபொருட்களுக்கான நியாயமான விலையை கொள்முதல் மூலம் உறுதிப்படுத்தவும், செயலாக்கத்தை எளிதாக்கவும் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றவும் முயல்கிறது என அமைப்பின் தலைவர் ஹன்னன் முல்லா தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

20.2.2021

Comments