ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது

தூத்துக்குடி, பிப். 16-- ராமநாத புரம்-தூத்துக்குடி இடையே பதிக்கப்பட்ட இயற்கை எரி வாயு குழாய் திட்டத்தை பிர தமர் நாளை (17.2.2021)  பயன் பாட்டுக்கு வருகிறது.

இந்தியன் ஆயில் நிறுவ னத்தின் நிர்வாக இயக்குன ரும், தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி எண்ணெய் தொழிற் சாலைகளின் ஒருங்கிணைப் பாளருமான பி.ஜெயதேவன், சென்னை பெட்ரோலிய கார்ப் பரேஷன் நிறுவன இயக்குனர் (பொறுப்பு) ராஜீவ் அயில வாடி, நிர்வாக இயக்குநர் (குழாய் பதிப்பு) எஸ்.எஸ்.சவந்த் ஆகியோர் சென்னை யில் நேற்று (15.2.2021) செய் தியாளர்களுக்கு பேட்டிய ளித்தனர். அப்போது அவர் கள் கூறியதாவது:-

இந்தியாவில் தற்சார்பு திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்லாகசென்னை மணலியில் உள்ள பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் நிறுவ னம் சார்பில் தூத்துக்குடி-ராமநாதபுரம் இடையே 143 கி.மீ.தூரத்துக்கு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப் பட்டுள்ளது.

மேலும் மணலியில் உள்ள நிறுவனத்தில்கேசோலைன் கந்தகம்' அகற்றும் யூனிட் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நிறைவடைந்த 2 திட்டங் களையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் 17-ஆம் தேதி (நாளை) மாலை 4.30 மணியளவில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து நாகப்பட்டினத்தில் காவிரி படுகையில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் சுத் திகரிப்பு ஆலை அமைக்கப் பட உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த சுத்திகரிப்பு நிலை யத்தில் பாரத் ஸ்டேஜ் வரை யறைகளுக்கு ஏற்றவாறு எம். எஸ். மற்றும் டீசல் உற்பத்தி செய்யப்படும். மதிப்பு கூட்டு துணை பொருளான 'பாலிப் ரோபிலின்' தயாரிக்கப்படும். இத்தகைய செயல்திட்டங்கள் மூலம் பெட்ரோலிய கெமிக் கல் சம்பந்தப்பட்ட தொழில் கள், துணை தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் பெருமளவில் உருவாகி, பெரும்பாலனோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து தமிழக ஆளுநர் பன் வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இவ் வாறு அவர்கள் கூறினர்.

Comments