கிருட்டினகிரியில் பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் நூலகம் அமைக்கப்படும்

ஊற்றங்கரை, பிப். 19- தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 13.2.2021 அன்று ஊற்றங் கரையில் கழகத் துணைத் தலைவர் தலைமையில் நடந்த கலந்துரையா டலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்:

தீர்மானம் 1: விவசாயிகளின் வாழ் வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து புது டில்லியில் நடைபெறும் போராட்டத் தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கும் சாத்தூர் வெடி விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறது.

கரோனா காலத்தில் மக்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இந்த நிலையில் திராவிடர் கழக பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் இணைய வழியில் விடுதலையை நடத்தி, வாசகர் களின் எண்ணிகையைப் பெருக்கி தொடர்ந்து கொள்கை பிரச்சாரத் தினையும், அவசியமான பிரச்சினை களையும், மய்யப் படுத்தி, போராட் டங்களை நடத்தியும், புதிய புதிய இயக்க வெளியீடுகளை கொண்டு வரவும், உளகலாவிய அளவில் உலக தலைவர் தந்தை பெரியார் தம் உயர் எண்ணங்களை பரப்பும் வகையில்திராவிடப் பொழில்என்ற காலாண்டு ஆய்வு இதழை தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் கொண்டுவந்தும்திராவிட நாற்றுஎன்ற மின்னிதழை தொடக்கம் செய்து சிறப்பான வகையில் வழிகாட்டிவரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இடை யறாப் பணிகளையும் வழிகாட்டுதல் களையும் அப்படியே ஏற்று இயக்க ஏடுகளுக்கு சந்தா சேர்த்தும் கழக அமைப்புப் பணிகளில் ஈடுபடுதல், இயக்கப் பிரச்சாரப் பணியினை தீவிரப்படுத்துதல் வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப் படை கொள்கையாக வலியு றுத்தப்பட்ட மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றுக்கு எதிராகவும் ஒவ் வொரு குடிமகனின் அடிப் படை கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஏஎச் பிரிவு வலியுறுத்தியும் விஞ்ஞான மனப்பான்மை சீர்திருத் தம் இவற்றை வளர்ப்பதற்கு மாறாக மூடநம்பிக் கைகளை வளர்க்கும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசின் பிற்போக் குத்தனங்களை கடைக்கோடி மனித னுக்கும் கொண்டு செல்லும் வகையில் கழக தலைவரின் வழிகாட்டுதலின்படி பிரச்சார திட்டங்களை வகுத்து செயல்படுவது இக்கால கட்டத்தில் மிகவும் இன்றியமையாத முதன்மை யான பணியாக தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் என். எல்.சி. நிறுவனம், ரயில்வே துறை, அஞ்சல் துறைகளில் கூட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காத வகையில் செயல்பட்டு வரும் பெரும்பாலும் வட நாட்டுக் காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் செயல்பட்டுவரும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கொடுத் திட்டதிராவிடம் வெல்லும்என் னும் முழக்க சுவரெழுத்துப் பிரச்சாரத் திற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கழக தோழர்களை இக் கலந்துரை யாடல் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழர் தலைவரின் ஒப்புதலைப் பெற்று கிருட்டிணகிரி நகரில் தந்தை பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் அமைப்புப் பணியினை தொடங்குவது எனவும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments