குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து

வாஷிங்டன்,பிப்.25- அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக் குரிய திட்டங்கள் மற்றும் கொள் கைகளை  புதிய அதிபராக பதவி யேற்றுள்ள ஜோ பைடன் மாற்றியமைத்து வருகிறார். அந்த வகையில் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பணி நிமித்த மாக குடியேறும் வெளிநாட்ட வர்கள் அந்த நாட்டு குடியுரி மையை பெறுவதற்காக விண்ணப் பித்து தேர்வு எழுத வேண்டும் எனும் நடைமுறை உள்ளது. விண் ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும் புரிதலை யும் நிரூபிக்க இந்த தேர்வு நடத் தப்படுகிறது.

முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக் கையைக் குறைக்க குடியுரிமை தேர்வு முறைகளைக் கடுமையாக் கியது. 2008ஆம் ஆண்டில் நடை முறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளை மாற்றியது.‌ அதாவது தேர்வில் 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது. இந்த கேள்விகள் பெரும்பாலும் அரசியல் ரீதியி லானதாகவும் கடுமையாகவும் இருந்தன. இந்த விதிமுறைகள் 2020 டிசம்பர் 1க்கு பிறகு குடி யுரிமை கோரி விண்ணப்பிப்ப வர்களுக்கு பொருந்தும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. டிரம்ப் விதித்த கெடுபிடிகளை தளர்த்தி புதிய அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள் ளார்.

அதன்படி இனி 2008ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப் பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் எனவும் இது மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 2ஆவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments