ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:     பள்ளிகளில் அய்ந்தாம் வகுப்புவரை தாய் மொழிக் கல்வி கட்டாயம் இருத்தல் வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.     மோடி ஆட்சியில் அரசுக்கு எதிரான கருத்து முடக்கப்படுகிறது. காங்கிரஸ் அல்லாத இந்தியா என்ற முழக்கமே, நாட்டில் எதிர்க்கட்சிகள் இருத்தல் கூடாது என்பதுதான் என மூத்த வழக்குரைஞர் ஏ.ஜி. நூரானி கருத்திட்டுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:     பெட்ரோல், டீசல் விலையை உடனே கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:     புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துதல் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் அமைத்த குழு, டில்லி பல்கலைக்கழகத்தில் நான்காண்டு பட்டப்படிப்பையும், மாணவர்கள் எந்த ஆண்டிலும் வெளியேற வாய்ப்பும் அளிக்கலாம் என்று அறிக்கை அளித்துள்ளது.     புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சகம் அமைத்த குழுவில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர்.     மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை நான்காக பிரித்து இட ஒதுக்கீடு அளிக்கலாம் என நீதிபதி ரோகிணி அமைத்த ஆணையத்தின் பரிந்துரையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பகவான்லால் சகானி வரவேற்றுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:     சமூக செயற்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்ததன் மூலம் மக்களுக்கு எதிராக பிரதமர் மோடி என்ற நிலை உருவாகி யுள்ளது என மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.     வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு விரைவில் குஜராத் மாநிலத்தில் ஆதரவு திரட்ட உள்ளதாக பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.     வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சாவு மணி என டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:     பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து, எந்த ஆய்வுக்கும் உட்படாத நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் அதற்கு விளம்பரம் தருவதுபோல் பேட்டி அளிப்பது சரியல்ல என மருத்துவர்கள் கருத்திட்டுள்ளனர்.     சட்ட விரோத தடுப்புகள் சட்டத்தின் (உபா சட்டம்) எதிர்க்கட்சி களுக்கு எதிராக பாஜக பயன்படுத்துகிறது. பழங்குடி மக்கள் ஹிந்துக்கள் அல்ல. அவர்களுக்கு என தனி கலாச்சாரம் உள்ளது என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஹார்வார்ட் பல்கலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கருத்திட்டுள்ளார்.

பிபிசி நியூஸ் தமிழ்:

அரசுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதைத் தடை செய்யும் தேச துரோக சட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவி மீது வழக்கு தொடுத்திருக்கிறது இந்திய அரசு. இது ஒரு பிரிட்டிஷ் காலனி ஆதிக்க கால சட்டம். இந்திய அரசு எதிர்ப்புக் குரல்களை அடக்க தேச துரோக வழக்குகளை பயன்படுத்துகிறதா? என கட்டுரையாளர் ஸ்ருதி மேனன் எழுதியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:     பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில வரியை மேற்கு வங்கம், ராஜஸ்தான், அசாம், மேகாலாயா ஆகிய மாநில அரசுகள் குறைத்துள்ளன.

- குடந்தை கருணா

22.2.2021

Comments