கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பா.ஜ.க.விற்கு எதிரானவர்களா என சமூக வலைதளத்தை ஆய்வு செய்யும் உத்தரகாண்ட் அரசு

டெகராடூன்,பிப். 8 உத்தரகாண்ட் மக்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விண்ணப்பம் செய்தால் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ய அம்மாநில அரசு முடிவு செய் துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வதற்கு புதிய கடவுச்சீட்டு விண் ணப்பிப்பவர்களிடம் காவல்துறை விசாரணை நடப்பது வழக்கமான ஒன்றாகும்.   இந்த விசாரணையின் மூலம் விண்ணப்பதாரர்கள் மீது ஏதும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அவ்வாறு வழக்குகள் நிலுவையில் உள்ளோர் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் முடக்கி வைக்கப்படும்.  இது அனைத்து மாநிலங்களில் உள்ள காவல்துறையின் செயல்பாடுகளில் ஒன்றாகும்.

உத்தரகாண்ட் காவல்துறைத் தலை வர் அசோக் குமார், “பலரும் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதனைத் தடுப்பது மிகவும் அவசியமாகும்.  குறிப்பாக வெளிநாடு செல்வோர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.  எனவே இனி கடவுச்சீட்டு விண்ணப்ப தாரர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆராய வேண்டும்.

ஏற்கெனவே தேச விரோத நடவடிக் கைகளில் ஈடுபடுவோருக்கு கடவுச்சீட்டு அளிக்கக் கூடாது என விதிமுறைகள் உள்ளன.  அதற்கு ஆதரவாக நான் கருத்து தெரிவிக்கிறேன்.  இதில் புதிய நடவடிக்கைகள் ஏதும் இல்லை.  ஒரு காவல்துறை அதிகாரி என்னும் நிலை யில் அரசியல் அமைப்பால் வரையறை செய்யப்பட்டுள்ள தேசவிரோத நட வடிக்கைகளுக்கு எதிராக நான் செயல் படுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அம்மாநில அரசு தற்போது உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்ப வர்களைக்கூட தேசத்துரோகிகள் வரி சையில் சேர்த்துள்ளது,

ஆகவே கடவுச்சீட்டு விண்ணப்பிப்ப வர்களின் சமூக வலைதளப் பகுதியில் மத்திய பாஜக அரசிற்கு எதிராக பதி விட்டிருந்தாலோ அதற்கு ஆதரவான பதிவுகளைப் பயன்படுத்தினாலோ அவர்களை மிரட்டும் வகையில் சட்ட விரோத நடைமுறையில் ஈடுபட்டுள்ளது, இதற்கு அரசு அதிகாரிகளையும் பயன் படுத்தி வருகிறது.

Comments