காவல்துறையினருக்கு சட்டையில் பொருத்தும் சிறியரக கேமரா

திருச்சி, பிப். 10- பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக ரோந்து பணிக்கு செல் லும் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் ஆங் காங்கே நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை அரிவாளால் வெட் டிய நிகழ்வும் அரங்கேறியது.

இதேபோல் போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அப ராதம் விதிக்கும்போது, ஒரு சில வாகன ஓட்டிகள் காவல்துறையினரி டம் வாக்குவாதம் செய்து வருகிறார் கள். சில நேரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் நீதிமன்றம்வரைகூட செல்கிறது. இதுதவிர அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நடத்துகிற போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டங்களின்போது ஒரு சிலர் காவல்துறையினரிடம் அத்து மீறுவதும் உண்டு. அதுபோன்ற சமயங்களில் உண்மை நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டியதும் காவல்துறையினரின் கடமையாகிறது.

அவ்வாறான சூழ்நிலைகளில் கையாளுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் தங்களுடைய சட்டையில் பொருத்தி கொள்ளும் வகையில் (பாடி) சிறிய ரக கேமரா பயன்பாட் டுக்கு வந்தது. முதல் கட்டமாக சென் னையில் பரிசோதனை அடிப்படை யில் இந்தவகை கேமராக்கள் பயன் படுத்தப்பட்டு வந்தன.

தற்போது திருச்சி மாநகரில் பணி யாற்றும் ரோந்து காவல்துறையின ருக்கு முதல்கட்டமாக 50 சிறியரக கேமராக்கள் வழங்கப்படுகின்றன.

Comments