ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

·     தெலுங்கான மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திற்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க காங்கிரஸ் வேண்டுகோள்.

·     தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 உட் பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பசி, வேலையின்மை, தற்கொலை என்ற மூன்று வாய்ப்பு களை பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளுக்கு அளித்துள்ளார் என ராஜஸ்தானில் நடைபெற்ற கிஷான் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

·     பிரதமர் மோடி கூறியஅந்தோலன் ஜீவிகள், பேச்சுரிமை, எழுத்துரிமை, போராட்டம் இவைகளை நசுக்கும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவார்கள் என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மூன்று ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரை டில்லியில் உள்ள தனது வீட்டில் நிறுத்துவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தன்னைக் கண்காணிக்க அரசு ஏற்பாடு செய் துள்ளதாக அவர் சந்தேகம் தெரிவித்து, காவலர்களைத் திரும்பப் பெறுமாறு டில்லி காவல்துறைத் தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.

பிபிசி நியூஸ் தமிழ்:

·   விவசாயிகள் போராட்டத்தை இழிவு படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு ICE என்ற ஆயுதமும் உள்ளது. அதாவது இன்கம் டாக்ஸ் (வருமான வரி), சிபிஅய் மற்றும் ED (அமலாக்கத் துறை). இந்த அமைப்புகளை விவசாயிகள் மீது ஏவிவிட முடியாது. மூன்று விவசாயச் சட்டங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் வரை எங்கள் இயக்கம் தொடரும்" என்று கூறுகிறார் விவசாய அமைப்பு களின் தலைவர் சவுத்ரி புஷ்பேந்திர சிங்.

தி டெலிகிராப்:

·     கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடன்  இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டுமானால், அது தேசிய அளவில் செய்யப்பட வேண்டும். ஏனென்றால், ஒரு மாநிலம் அதைச் செயல் படுத்த முயற்சித்தால், நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். முறையான ஆய்வுக்குப் பிறகுதான் இதைச் செய்ய வேண்டும். பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண் டும் என ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் கருத்திட்டுள்ளார்.

·   காவல்துறை அதிகாரி பயிற்சி முடித்து வெளியேறும் அணிவகுப்பில் ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா புதிய காவல்துறை பட்டதாரிகளுக்கு பேட்ஜ்களை வழங்குவதைக் காட்டும் படங்கள் சர்ச்சையைத் தூண்டியுள்ளன, இது "நவ-பாசிசத் திற்கான முதல் படிகள்" என முன்னாள் ராணுவ பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

14.2.2021

Comments