கடலூரில் பகுத்தறிவாளர் கழகத் தோழர் சு.அய்ங்கரன்-ரேணுகா இல்ல இணையேற்பு விழா

7.2.2021 அன்று கடலூர் கூத்தப்பாக்கத்தில்  பகுத்தறிவாளர் கழக தோழர் சு.அய்ங்கரன்-பா.ரேணுகா ஆகியோரின் மகள் பொறியாளர் இளநகை , பாஸ்கரன்-மகாலட்சுமி ஆகியோரின் மகன் பொறியாளர் அரவிந்த்குமார் இவர்களின் ஜாதி மறுப்புடன் கூடிய சுயமரியாதை திருமணம் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. முன்பாக முதல்நாளே கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், வாழ்விணையர் கே.என்.கலைச்செல்வி மணமக்களை வாழ்த்தினர். மேலும் மணவிழாவில் மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் பேராசிரியர்,ரா..குழந்தைவேலன், மண்டல செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் மாணிக்கவேல், மா... டிஜிட்டல் இராமநாதன், மா..செ. கோ.வேலு, மாவட்ட மாணவர் கழக தலைவர் ரேவந்த், ஆண்டணி, கழக தோழர்கள் தங்க பாஸ்கர், இந்திரஜித், கடலூர் நகர தலைவர் .எழிலேந்தி, நகர செயலாளர் சின்னத்துரை, நூலகர் மாதவன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, பரந்தாமன், வழக்குரைஞர் வீ.அழகரசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அய்ங்கரன் வரவேற்க, மணமகளின் தந்தை பாஸ்கரன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Comments