ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தகுதியுடைய அனைவரும் வாக்களித்து 100% வாக்குகள் பதிவாக வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறிக் கொண்டேEVM எந்திரத்தில் நோட்டா பொத்தானை அமைத்து செல்லா வாக்காக்கு வது  சரியா? நோட்டா கட்டாயம் தேவையா?

- வெங்கட. இராசா, .பொடையூர்.

பதில்: மற்ற எதற்கும் முடிவு செய்ய முடியாதவர்களை வாக்காளர் உரிமை படைத்தவர்களாகக் கணக்கில் வைத்துக் கொள்வது ஜனநாயகத்திற்கு ஒரு கரும்புள்ளி தான் என்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பா...வின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளநோட்டாபெரிதும் உதவுகிறதே!

கேள்வி: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனுதர்மத்திற்கும் - மனித தர்மத்திற்கும் இடையிலான போராட்டம் எனக் கூறலாமா?

- .பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில்: உண்மை அதுதானே - இந்தக் கேள்விக்கே இடமின்றி - மனு தர்மத்துக்கும், மனித தர்மத்துக்கும், குலதர்மத்துக்கும் - சமதர்மத்துக்கும்தான் போர் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

கேள்வி: வாழ்வியல் சிந்தனைகள், மத்திய பாஜக ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி ஆகியவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டதைப் போன்று 'விடு தலை'யில் வெளிவருகின்ற தலையங்கம் மற்றும் முக் கியக் கட்டுரைகளையும் தொகுத்து நூலாக வெளிவர ஆவன செய்வீர்களா?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: முன்பு செய்தோம் - பிறகு இடைவெளி ஏற்பட்டு விட்டது. முக்கிய அறிக்கை, தலையங்கங்களை ஆவணமாக மின் புத்தக வடிவில் நிச்சயம் கொண்டு வருவோம். 2021இல் அதைத் தொடருவோம் - யோசனைக்கு நன்றி!

கேள்வி:  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடு தலையைப் பற்றி ஜனவரி 25ஆம் தேதியே மத்திய உள்துறைக்குக் கடிதம் எழுதிவிட்ட  தமிழக ஆளுநர் அதற்குப் பிறகு தன்னைச் சந்தித்த தமிழக முதல்வரிடம் கடிதம் பெற்றுக் கொண்டாரென்றால், அவர் தமிழக முதல்வரை, அரசை ஏமாற்றுகிறார் என்று தானே பொருள்?

- எஸ். பூபாலன், திண்டிவனம்.

பதில்: ஆமாம்! மகா வெட்கக்கேடு! கோபம் வர வேண்டியவர்களுக்கு சொரணை இல்லையே! கார ணம்... வெளிப்படை!

கேள்வி:  சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைக் கான பணிகள் வரும் நிதி ஆண்டிலேயே தொடங்கப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் அல்லவா?

- எஸ். பத்ரா, வந்தவாசி.

பதில்: சேலம் உள்ளிட்ட அப் பகுதி விவசாயிகள் நெஞ்சில் அணைந்திருந்த தீயை மீண்டும் கொளுத்தும், ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் கனவான்களின் கருணைக் காக ஏங்கும் உள்ளத்தவர்களின் செயலே இது!

கேள்வி:  உள்ளங்கையில் உலகம் அடங்கிவிட்ட காலத்தில் ஒரு நாட்டின் தலைநகரத்தை முற்றுகையிட்டு 70 நாட்களுக்கும்மேலாக போராடி வரும் விவசாயி களுக்கு ஆதரவாக வெளிநாட்டவர் கருத்து தெரிவிப் பது தவறாகுமா?

- கிருபா, பெருங்களத்தூர்

பதில்: மனித உரிமைகள் பறிப்பு எங்கு நடந்தாலும் அதைச் சுட்டிக் காட்டும் - கண்டிக்கும்,  உரிமை -உலக மக்களுக்கு அய்.நா. மனித உரிமை சாசனம் அளித்துள்ள பிரிக்கப்பட முடியாத உரிமை!

கேள்வி:  அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்துவது பற்றி திராவிடர் கழகத்தின் கருத்து?

- ..தென்றல், ஆவடி

பதில்: ஆரம்பத்திலிருந்தே எதிர் நிலைதான். ஏரா ளமான இளைஞர்கள் வேலை கிட்டாது வேதனையில் உள்ளபோது, ஓய்வுபெற வேண்டியவர்களை, சம்பளச் செலவு குறையும் என்பதாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ, வயதைக் கூட்டுவது, வேலை கிட்டாததால் நாட்டின் இளைஞர்கள் தவறான வழியில் நடக்க மறைமுகமான தூண்டுதல் போன்றது அல்லவா?

கேள்வி: இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் விவசாயிகள் போராட்ட விஷயத்தில் ஏன் உலகளவில் இந்தியாவின் மாண்பு விமர்சிக்கப்படுவதை குறித்து சிந்திக்கவில்லை?

- .சி.கி.ராஜ், சென்னை

பதில்: இறையாண்மையில் கவலை இருந்தால் வெளிநாட்டு மூலதனத்தை 49 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு வரை நீட்டுவார்களா?

பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அயல் நாட்டு முதலீட்டை 100 சதவிகிதம் அனுமதிப்பார்களா?

கேள்வி:  தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் அவர் களின்உங்கள் தொகுதியில் ஸ்டாலின்பிரச்சாரம் எப்படி உள்ளது?

- மு.சந்தானம், திருச்சி

பதில்: சிறப்பாக உள்ளது என்பதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கிறோம் - கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும் திரண்டு வரவேற்பைத் தருகிறார்கள். நல்ல வெற்றிகரமான முயற்சியாக அமைந்துள்ளது!

நிச்சயம் பலன் அளிக்கும்.

Comments