டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· தெலங்கானாவில்
ஆட்சியைப் பிடிக்க பாஜக தனது அலுவலகத்தை வாஸ்து முறையில் மாற்றி அமைத்து வருகிறது.
· புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை நீக்கியது பாஜக அரசியலின் சிறு பகுதிதான். காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதுதான் மொத்தத் திட்டம் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· மோடி
தன்னை பிரதமர் என்று கருதாமல், நாட்டின் அரசர் என்று நினைத்து செயல்படுகிறார் என காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
· வரலாற்றில்
அதிகம் பிரபலம் ஆகாத தலைவர்களை முன்னிலைப்படுத்தி தனது ஹிந்துத்துவா அரசியலை பாஜக செயல்படுத்தி வருகிறது என ஜி.பி.
பந்த் சமூக விஞ்ஞானக் கழகத்தின் இயக்குநர் பத்ரி நாராயண் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
டைம்ஸ்
ஆப் இந்தியா:
· மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா -2021 தொடங்குவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடு முழுவதும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார். ஒரு ஜாதியை அடிப்படையாகக் கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஜாதியின் மக்கள்தொகை பற்றியும் சரியான புள்ளிவிவரத்தைக் கொடுக்கும். மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக அரசாங்கங்கள் சிறந்த முடிவை எடுக்க இது உதவும் என்று நிதிஷ் குமார் ஜே.டி.யூ
அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தி
டெலிகிராப்:
· பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஏழு
நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் ஆறில் பெரிய வெற்றிகளைப் பெற்றது மற்றும் ஏழாவது இடத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
· விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை வெளிநாடுகளில் இருந்து கண்டனம் செய்வதை நிறுத்தும் இந்திய அரசின் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக தெரியவில்லை. அமெரிக்காவிலும் பிற இடங்களி லிருந்தும் 75 அமைப்புகள் ‘தி நியூயார்க் டைம்ஸ்'
செய்தித்தாளில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளன.
- குடந்தை
கருணா
18.2.2021