பா.ஜ.க. சாமியார் ஆளும் உ.பி.யில் மீண்டும் ஒரு கொடூரம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சிறுமிகள்

லக்னோ, பிப்.19 உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மூன்று சிறுமிகள் வயலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு அதில் இருவர் உயிரிழந்துள் ளதும், மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடு வதுமான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி யிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள உன்னாவ் மாவட்டத்தில், மீண்டும் ஒரு கொடூரச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. பாபுரா என்ற கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், தங்களின் கால்நடைகளுக்குத் தீவனம் எடுப்பதற்காக அருகிலுள்ள வயலுக்குச் சென்றிருக்கிறார்கள். நீண்ட நேரமாகியும் அவர் கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினரும், கிராம மக்களும் சிறுமிகளைத் தேடத் தொடங்கியிருக் கிறார்கள்.

நீண்டநேரத் தேடலுக்குப் பிறகு, அந்த மூன்று சிறுமிகளும் அருகிலிருந்த வயல்வெளியில், அவர் களின் ஆடைகளால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு சிறுமிகள் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க்கப்பட்ட மற்றொரு சிறுமிக்கு மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர் பாகப் பேசிய காவல்துறை அதிகாரி ஆனந்த் குல்கர்னி, ``இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டனர். மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் உன்னாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக் கிறார். குற்றவாளிகளைத் தேடும் பணி நடை பெற்றுவருகிறது. சிறுமிகளின் வாயில் வெள்ளை நுரை இருந்ததால், விஷம்வைத்து கொல்லப்பட் டிருக்கலாம் என்று முதற்கட்ட மருத்துவ ஆய்வில் தெரிகிறது" என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

காவல்துறை பதில் கூற மறுப்பு!

கைகள் கட்டப்பட்ட நிலையில், எப்படி அவர்களால் விஷம் குடித்திருக்க முடியும் என்று சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் கேட்கப்படுகிறது. மேலும், ``எங்களுக்கு யாருடனும் முன்பகை கிடையாது. இதை யார் செய்திருக்கக்கூடும் என்று எங்களால் யூகிக்கவும் முடியவில்லை" என்று சிறுமிகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அச்சிறுமிகள்  பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளனர் என்று சிறுமிகளை மீட்ட ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை இது குறித்து பதில் கூற மறுத்துவிட்டது

சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. காவல்துறையினர் இறந்த சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பெண் கள் பாதுகாப்பில் அவப்பெயர் பெற்ற உன்னாவில், மீண்டுமொரு சம்பவம் நடந்திருப்பது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments