வேளாண் சட்டங்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் தேவை

ஹிமான்சு

 சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் வேளாண் சட்டங் கள் பற்றி போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக் கும் அரசுக்கும் இடையேயான சமரசப் பேச்சுவார்த் தைகளுக்கு முட்டுக் கட்டை ஏற்பட்டு இருப்பதால்ஜனவரி 26 அன்று விவசாயிகள் மேற்கொண்ட டிராக் டர் பேரணியின் போது நடந்தேறியுள்ள  வன்முறை நிகழ்ச்சிகள்  விரும்பத் தகாத ஒரு திருப்பத்தை ஏற் படுத்தியுள்ளன. இரண்டு மாத காலமாக எந்த வன்முறை நிகழ்ச்சிகளும் இல்லாமல் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்ச்சிகள் நடந்தேறுவது எவ்வாறு விவசாயிகள் சங்கத் தலை வர்களாலும், காவல் துறையினராலும் அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது இன்னமும் தெளிவாகத் தெரிய வில்லை. வன்முறை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப் பட்டிருப்பதை அறிந்துதான் அந்தப் பேரணியை நடத்துவதற்கு காவல் துறை அனுமதி அளித்தது போலவே தோன்றுகிறது.

நம்பிக்கை இன்மையின் நிழல்

சமூக விரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கை களை மேற்கொள்ளத் தவறியதற்கு யார் பொறுப்பு என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். இரு தரப்பின ருக்கும் இடையே நடந்து வந்த பேச்சு வார்த்தைகள் முறிந்து போனதற்கு விவசாயிகளின் நம்பிக்கையின்மையே காரணம் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இரண்டு மாத காலமாக எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் நடந்தேறியுள்ள இந்த வன்முறைகளுக்கு அந்த போராட்டமே  காரணம் என்று கூறி அதனைக் கொச்சைப் படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகள் ஊடகத் தின் ஒரு பிரிவினராலும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாலும்  மேற்கொள்ளப் பட்டுள்ளன. அரசு மற்றும் விவசாய சங்கத்தினர்களுக்கு இடையேயான நம்பிக்கையின்மையை இது அதிகரிக்கவே செய்யும். எவ்வளவு முயற்சி செய்தாலும்,  எந்த பயனுள்ள முடிவுக்கும் பேச்சு வார்த்தைகள் வழிவிடும் வாய்ப் புகள் அற்றதொரு சூழ்நிலையே இப்போது நிலவி வருகிறது.

டில்லி மாநகர எல்லையின் அருகில் அமைந்துள்ள பல்வேறுபட்ட இடங்களில் கடந்த இரு மாத காலமாக  நடந்து வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட போதிலும்,  விவசாயிகளின் பிரதிநிதிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளில், கடந்த செப்டம்பர் மாதத்தில்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறவேண்டும் என்பதும்,  விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான குறைந்த விலை அளிக்கப்பட வேண்டும் என்ற அளவிலும் மட்டுமே வரையறைக்குட்பட்ட  கோரிக்கைகள் அல்ல. விவசாய உற்பத்திப் பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான 2020 ஆம் ஆண்டு சட்டம், விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து பாதுகாப்பு அளிக்கும், விலை உத்தரவாதம் அளிக்கும், 2020 ஆம் ஆண்டு விவசாய சேவை சட்டம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் 2020 ஆம் ஆண்டு திருத்த சட்டம் ஆகியவையே அந்த மூன்று வேளாண் சட்டங்களாகும்.

கோபத்தின் எதிரொலி

பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் விவசாயிகளின் பிரதிகள் மட்டுமே இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் என்ற ஒரு தவறான கருத்து உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில்,  இந்தப் பிரச்சினைகள் நாட்டின் பல்வேறு பட்ட மாநிலங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருப் பதையடுத்து,  பெரும் எண்ணிக்கையிலான விவசாயி கள் அமைதியாகப் போராடுவதற்குத் திரட்டப்பட்டு உள்ளனர். விவசாயப் பொருள்களுக்கான குறைந்த பட்ச நியாய விலை அளிப்பதற்காக மேற்கொள்ளப் படும்  கொள்முதல் நடவடிக்கைகளின் வழிகளில் மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. என்றாலும், விவசாயப் பொருள் உற்பத்தி சந்தை மண்டிகளின் பங்களிப்பும் செயல் பாடுகளிலும் கூட மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாடுகள் நிலவுகின்றன.

இத்தகைய வேறுபாடுகள் இருந்த போதிலும்,  விவசாய சீர்திருத்தங்கள் பற்றிய அரசியல் பொருளா தாரத்துக்கு எதிராக  போராட்டத்துக்கு திரட்டப்படும் இத்தகைய விவசாயிகளின் கோபத்தை பிரதிபலிப்ப தாகவே அது உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத் துறையைக் கைப்பற்றிக் கொள்ளும் என்பதும் மற்றும் அவ்வாறு நேரும்போது அரசு அதில் தலையிடாமல் பின் வாங்கிக் கொள்ளும் என்பதும்  விவசாயிகளின் நியாயமான அச்சங்களே ஆகும். தங்களிடம் இருக்கும் சொற்ப நிதி ஆதாரங் களையும், நிலங்களையும் இறுதியில் விவசாயிகள் இழக்க நேரிடும்  என்ற அளவில் தனியார் நிறுவனங் கள் விவசாயிகள் மீது கட்டுப்பாட்டை மேற்கொள் வதற்கு அனுமதிப்பதாக இருப்பதாகவே அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நம்பிக்கையின்மை நிலவுவதே இதன் காரணம்.

விவசாயப் பொருள்களுக்கான குறைந்த பட்ச நியாய விலை அளிப்பதற்கான திட்டம் பிகார் மாநிலத்தில் கைவிடப்பட்டது போன்ற அனுபவம் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்பட்டிருப்பதால், விவ சாயிகளின் இத்தகைய அச்சம் அடிப்படையற்றது என்று கூறிவிடமுடியாது.  கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயத் துறை அடைந்து வரும் கடுமையான துன்பங்கள், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பொருளாதார வளர்ச்சி குறையும்போது, இத்தகைய அச்சங்கள் பலம் பெறுகின்றன. விவசாயக் கூலி குறைக்கப்பட்டதுடன், விவசாய உற்பத்திப் பொருள்களின் தோட்ட விலை குறைந்தது ஆகிய காரணங்களால், கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாய வருமானம் வீழ்ச்சி அடைந்து வந்துள்ளது. இந்த நிலையில், விவசாயத் துறைக்கான அரசின் ஆதரவு விலக்கிக் கொள்ளப் படும் ஒரு போக்கையே இந்த வேளாண் சட்டங்கள் எதிரொலிப்பவையாக இருக்கின்றன.

சட்டமியற்றியதில் நேர்ந்த தவறுகள்

இந்த மூன்று வேளாண் சட்டங்களின் சாதக பாத கங்களைத் தாண்டி  இந்த சமரசப் பேச்சு வார்த்தை களுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டைகளைக் கடந்து செல்வதற்கு அரசு மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சி பற்றியும், அரசின் செயல்பாடுகளில் விவசாய சீர்திருத்தங்கள் பற்றியும்  திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கும் அரசின் பரப்புரை பற்றியும்  விவ சாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.

பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதற்காக ஒரு நடுவர் குழுவை நியமிக்கும் உச்சநீதி மன்றத்தின் முயற்சிக்கு விவசாயிகளிடமிருந்து சாதக மான ஒப்புதல் கிடைக்கவில்லை. பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததற்கும்,  அரசு அமைச்சர்கள் மற்றும் உச்ச நீதிமன்றக் குழுவினால் மேற்கொள் ளப்பட்ட நடுநிலை முயற்சிகள் தோல்வி அடைந் ததற்கும் காரணம், ஒரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் ஒரு பிரச்சினை மட்டுமே இது என்று அரசு தவறாகப் புரிந்து கொண்டதுதான். அரசு விவசாயி களிடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகளை சேர்ப்பதில்லை என்ற விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசின் முயற்சியின் காரணமாக, பல்வேறுபட்ட மாநிலங்களில் ஆட்சி செய்யும் நம் நாட்டின் ஒவ்வொரு  மாநிலத்தையும் சேர்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அது போன்ற விவாதங்களாலும், பேச்சு வார்த்தைகளாலும் இயலாது.

பிரச்சினைகளுடன் தொடர்புடைய பல்வேறு பட்டவர்களின் கவலைகளைப் பற்றி கவலை கொள்ளாமல், கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்,  முக்கியமான பிரச்சினைகள் பற்றி சட்டம் இயற்றும் நடைமுறையை அது பிரதிபலிப்பதாக இருக்கிறது.  நாட்டில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டதன் விளைவாக ஏற்பட்ட  மிகமிக மோசமான பொருளாதார சரிவும், நெருக்கடியும்  நிலவிய நிலையில், கோவிட் 19 தொற்றுநோய் நிவாரணத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த வேளாண் சட்டங்கள் மூன்றும் அரசினால் அறிவிக்கப்பட்டன.

இந்த சட்டங்கள் அறிவிக்கப்பட்ட நேரம் தவ றானது என்பது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் எந்த வித விவாதமும் இல்லாமலேயே அந்த மசோதாக்களைக் கட்டாயமாக நிறைவேற்றியதும், இவை பற்றி எந்த விதமான விவாதங்களையோ, பேச்சு வார்த்தைகளையோ மேற்கொள்ள மறுப்பதும் அரசின் பிடிவாதத்தைக் காட்டுவதாக இருந்தது. இந்தப் பிரச்சினையில் முக்கியமான தொடர்புடைய மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க மத்திய அரசு தவறியதும், இந்த மூன்று வேளாண் சட்டங்களை ஏற்க மறுத்து, ஆறு பெரிய மாநிலங்கள் அவற்றின் சட்டமன்றங்களில் தனித் தனியாக சட்டங்களை இயற்ற நேர்ந்துள்ள ஒரு விசித்திரமான நிலையை அது தோற்றுவித்துள்ளது.

நாடாளுமன்ற வரவு செலவு திட்டக் கூட்டம் நல்லதொரு வாய்ப்பு

இந்த மூன்று வோளாண் சட்டங்களையும் திரும் பவும் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான, மற்றொரு நல்வாய்ப்பை  ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கியுள்ள வரவு செலவு திட்ட கூட்டத் தொடர் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட ஒரு சட்டத்தை மாற்றி எழுதி திருத்துவது என்பது நாடாளுமன்றத்தின் மூலமாக மட்டுமே செய்யப்பட இயன்றதாகும். வெளியே நடைபெறும் பேச்சு வார்த்தைகள்  மூலம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணும் முயற்சி ஒரு புறமிருக்க,  இந்தப் பிரச் சினையை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது நாட்டில் மிகமிக உயர்ந்த அதிகாரம் கொண்ட நாடா ளுமன்றத்தினால் மட்டுமே செய்ய இயன்றதாகும். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறாத நேரங்களில் வேண்டுமானால், இப்பிரச்சினையுடன் தொடர்புடைய பல்வேறுபட்டவர்கள் தங்களது கவ லைகளுக்கு விளக்கம் அளித்திருந்தபோது, விவாதங் களும் பேச்சு வார்த்தைகளும் நடத்துவது பொருத்த மாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருந்திருக்கக் கூடும். இந்தப் பிரச்சினையை இப்போது நாடாளு மன்றம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரமிது. எப்படியிருந்த போதிலும் இந்த வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பது மட்டுமன்றி, இந்த சட்டங்களை ஒன்றரை ஆண்டு காலம் நிறுத்தி வைப்பதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டங்களை 18 மாத காலம் நிறுத்தி வைப்பது என்ற அரசின் உத்தி, அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் நடக்க இருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் வரை இந்த சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதை தாமதப் படுத்துவதே ஆகும். புதிய வடிவிலான வேளாண் சீர்திருத்த சட்டங்களில் ஓர் அகண்ட கருத்தொற்று மையை உருவாக்க இயன்றதொரு வாய்ப்பை அது அரசுக்கு அளித்துள்ளது. அவ்வாறு கூறுவதன் பொருள் என்னவென்றால், தற்போது நாடாளுமன் றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் இணைந்து, அது போன்ற  அகண்ட விவாதங்களைத் தொடங்கி மேற்கொண்டு, புதிய சட்ட திருத்தங்களைக் கொண்டு வருவது என் பதையே குறிக்கும்.

பல்வேறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்கப்பட வேண்டியதன் தேவை

பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு நாடாளுமன்ற நிலைக் குழு அதற்கு ஒரு நியாயத் தன்மையை அளிக்கும் என்பது மட்டு மன்றி, அதன் பிரதிநிதிகளாக இருக்கும் மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து பல்வேறுபட்ட கருத்துகளையும் அதனால் அளிக்க இயலும். ஒன்றரை ஆண்டு காலம் வேளாண் சட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுவதை நிறுத்தி வைக்கத் தயாராக இருக்கும் ஓர் அரசுக்கு, இது போன்ற விவசாய சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் உள்ள பயன்கள் பற்றி மாநில அரசுகளையும்,  விவசாயிகளையும் புரிந்து கொள்ள வைப்பதற்கானதொரு வாய்ப்பையும் அது அரசுக்கு அளித்துள்ளது. மேலும், அரசுக்கும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கும் இடையே நிலவும் நம்பிக்கைக் குறைபாட்டைப் போக்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அது இருக் கும். விவசாய சந்தையில் தீவிரமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு விரும்பும் ஒரு அரசுக்கு,  தற் போதைய வடிவில் உள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதும், புதிய சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சிகளை மீண்டும் புதியதாகத் தொடங்குவதும், இந்த நாட்டின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் பால் அரசு கொண்டுள்ள தீவிரமான அக்கறையை மறுபடியும் உறுதிப்படுத்துவ தாகவும் இருக்கும்.

நன்றி: ‘தி இந்து', 01-02-2021

தமிழில் : .. பாலகிருட்டிணன்.

Comments