"தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால்"-கடத்தூரில் நடைபெற்ற கருத்தரங்கம்

கடத்தூர், பிப். 26- தருமபுரி  மாவட்டம்  கடத்தூர்  விடுதலை வாசகர் வட்டத் தின் சார்பில் 'தமிழகத்தில்  தந்தை  பெரியார் பிறந்திருக்காவிட்டால்என்னும்  தலைப்பில்  20-2-2021 அன்று   மாலை  4 மணி  அளவில்  கடத்தூர்  தமிழ்ச்செல்வி அச்சகத்தில்  கருத்தரங் கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  விடுதலை  வாசகர்  வட்டத் தலைவர்  கோ.தனசேகரன்  தலைமை  தாங்கினார்.   வாசகர்  வட்ட செயலாளர்    .நடராஜன் அனைவ ரையும்  வரவேற்றுப்  பேசினார். மாவட்ட  பகுத்தறிவு  ஆசிரியரணி செயலாளர்   மு.பிரபாகரன்,   மாநில மாணவர் கழக துணை   செயலாளர் .மு. யாழ்திலீபன், மாவட்ட  மாணவர் கழகத் தலைவர்   .சமரசம்,  மாவட்ட ஆசிரியரணி  துணைத் தலைவர் தீ.சிவாஜி  ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கடத்தூர்  விடுதலை  வாசகர் வட்டத்தில் அய்ந்தாவது  மாதமாக. தொடர்ந்து சிறப்பாக கருத்தரங்கம்   நடைபெற்று வருகிறது. தோழர்களும் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.  ஆனால், வாசகர்  வட்டத்திற்கு நிதி ஆதாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அதனால், வாசகர் வட்ட   வளர்ச்சி நிதியாக என்னுடைய சார் பில் ஒவ்வொரு மாதமும் ரூ.200அய் அளிப்பதாக அறிவித்து மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன் வாசகர் வட்ட வளர்ச்சி நிதியை   துவக்கிவைத்தார். வாசகர்  வட்டத்தின்   நிகழ்வுக்காக சிறப்புரை யாற்ற வருகை  தந்த தமிழ்நாடு  முற் போக்கு  எழுத்தாளர்  சங்க  பொறுப் பாளர்    நாகை.பாலு     தன்னுடைய  பங்களிப்பாக  ரூபாய்1000 அளித்தார். அதைத்தொடர்ந்து குமுதா ரூ.200, தனசேகரன் ரூ.300, நடராஜன் ரூ.200, தமிழ்ச்செல்வன் ரூ.100, கார்த்திக் ரூ.80 மொத்தம் 2080  வளர்ச்சி நிதி யாக  அளித்தனர். மேலும் அடுத்த மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதம் தொடர்ந்து செந்தில்குமார், பிர பாகரன், இர.கிருஷ்ணமூர்த்தி, சோ.பாண்டியன், முனுசாமி ஆகியோர் தலா ரூ.200 அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.

தொடர்ந்து 'தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால்' என்னும் தலைப்பில்   தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்க பொறுப் பாளர் நாகை.பாலு அவர்கள்  சிறப்பு ரையாற்றினார்.

அவருக்கு வாசகர் வட்டம் சார் பில் "விழித்துக்கொள் எம்மினமே" என்னும் கவிதை நூலை  அளித்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில்  மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் .பிர தாப், கார்த்திக்,  பெரியார் அம்பேத்கர் செயற்பாட்டாளர் பாரதிராஜா, ஒன் றிய திமுக பொறுப்புக் குழு  உறுப் பினர் சோ.பாண்டியன்,  ஊராட்சி  மன்ற துணைத் தலைவர்  .முனிசாமி, இரா.செந்தில்குமார், தாளநத்தம் திமுக பிரமுகர் கோமகன், உதயகுமார், ரேகடஅல்லி தீ.மாதவன், பொது வுடமை இயக்கத் தோழர்  சுந்தர்ராஜன்  மற்றும்  பலர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். இந்நிகழ்வை மண்டல திரா விடர் கழகத் தலைவர்  தமிழ்ச்செல்வன்  ஒருங்கிணைத்து நடத்தினார்.

Comments