திருவண்ணாமலை அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பா.ஜ.க., அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிப்போம்!

8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் சூளுரை

சேத்துப்பட்டு, பிப். 5- திருவண்ணா மலை மாவட்டம், சேத்துப் பட்டு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணிக்கு எதி ராக வாக்களிப்போம் என தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமத் தில் நேற்று (4.1.2021) 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள், விவசாய நிலத் தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ‘விவசாய நிலங்களை அழிக்கும் 8 வழிச் சாலை எங்களுக்கு வேண் டாம். வழிவழியாக எங்களது வாழ்வாதாரத்தை காத்து, சோறு போடும் இந்த பூமியை  தரமாட்டோம்என கண்டன முழக்கமிட்டனர். மேலும், ‘உச்சநீதிமன்றம், மாசுக்கட் டுப்பாடு துறை 8 வழிச் சாலைக்கு தடை உத்தரவு வழங்கியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று அதற்கான நிதி ஒதுக்கி யுள்ள தற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

தேவையின்றி வேளாண் சட்டத்தை கொண்டுவந்தது டன், அதனை திரும்ப பெறா மல் விவசாயிகளை அலைக் கழிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். தமிழகத்தில் அதற்கு துணை போகும் எடப்பாடி அரசையும் கண் டிக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணிக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு, வாக் களித்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவோம்என சூளுரைத்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Comments