‘துக்ளக்', 17.2.2021, பக்கம் 3
நிகழ்ச்சிகளில் வாள் கொடுக்கிறார்கள்; நூல்கள் கொடுக்கிறார்கள், கிரீடம் சூட்டுகிறார்கள் - அதேபோல் ‘வேல்' கொடுக்கிறார்கள் - அதைப் பெற்றுக் கொள்வது நாகரிகத்தன்மை.
குன்றக்குடி மடத்துக்குச் சென்றபோது தந்தை பெரியாருக்கு மடத்தின் மரபுப்படி திருநீறு பூசினார்கள் - இதனால் பெரியார் பக்தர் ஆகிவிட்டார் என்று சொல்லப் போகிறார்களா?
கல்வி நிறுவனங்களில் தந்தை பெரியார் கருத்துரை வழங்க அழைக்கப்படுவதுண்டு. அத்தகு சந்தர்ப்பங் களில் கடவுள் வாழ்த்துப் பாடும் நிலையில், வயது மூப்பின் காரணமாக தானாக நிற்க முடியாத உடல் நிலையிலும், உதவியாளர்களாக இருந்த தோழர்களின் தோளில் தன் கரங்களை இணைத்துக் கடவுள் வாழ்த்துப் பாடல் முடியும் வரை கால்கள் நடுநடுங்க நின்று கொண்டுதான் இருப்பார்.
இதுதான் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் கற்றுக் கொடுத்த நயத்தக்க நனிநாகரிகம்!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்பொழுது, குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் பேர்வழிகளை ஜெகத்குரு என்று போற்றும் அம்பிகளும், அவிட்டுத் திரிகளும், தர்ப்பைகளும் செய்யும் சிண்டு முடியும் வேலை எல்லாம் காலங்கடந்த ராஜதந்திரம் - கவைக்கு உதவாத கருமாந்திரம்!