குடந்தையில் "திராவிடம் வெல்லும்" சிறப்புக்கூட்டம்

கழகத்துணைத் தலைவர் சிறப்புரை

குடந்தை, பிப். 8- குடந்தை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 31-.1.-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் திரா விடம் வெல்லும் சிறப்பு கூட் டம் மாவட்ட இளைஞரணி தலைவர் . சிவக்குமார் தலை மையிலும்  மாவட்ட இளை ஞரணி செயலாளர்  லெனின் பாஸ்கர், குடந்தை ஒன்றிய இளைஞரணி செயலாளர் பெரியார் தென்றல், திரு விடைமருதூர் ஒன்றிய இளை ஞரணி தலைவர் திலீபன், திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கவுதம், பாபநாசம் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜ ராஜன்,பாபநாசம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி தலை வர் அபினேஷ், திருப்பனந் தாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் விவேகானந்தன், வலங்கைமான் ஒன்றிய இளை ஞரணி தலைவர் பிரவீன், வலங்கைமான் ஒன்றிய இளை ஞரணி செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா வெற்றி குமார் மற்றும் மண் டல இளைஞரணி செயலா ளர் ராஜவேல் தொடக்க உரையாற்றினர். நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் இரா ஜெயக்குமார்,கழக அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், கழக காப் பாளர் ஜெயராமன், தஞ்சை மண்டல செயலாளர் குரு சாமி,  மாவட்டத்தலைவர்  நிம்மதி, குடந்தை நகர தலை வர் கவுதமன், நகர செயலாளர் ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சின்னை பாண்டி யன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் கள் திராவிடம் வெல்லும் என்கிற தலைப்பில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இயக்க வரலாற்று ஆய்வுரையாக இளைஞர்களுக்கு பயிலரங் கமாக உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் வலங்கை கோவிந்தன், மேனாள் செயலாளர் மில்லர்,மாவட்ட மகளிர் அணி துணைச் செய லாளர் திரிபுரசுந்தரி, திரு விடைமருதூர் ஒன்றிய தலைவர் கணேசன், திருவி டைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், வலங்கை மான் ஒன்றிய தலைவர்  சந் திரசேகரன், ஒன்றிய செயலா ளர் பவானி சங்கர், திருப்பனந் தாள் ஒன்றிய செயலாளர் மோகன், திருப்பனந்தாள் ஒன்றிய அமைப்பாளர் தமிழ் மணி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் உஷாராணி, பட்டீஸ்வரம் இளவழகன், ராவணன் நாச்சியார்கோயில்  குணசேகரன், ஆசைத்தம்பி, அரங்க வைரமுடி, ராணி குருசாமி,சுதன்ராஜ், சுகன்யா மற்றும் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய கழக தோழர்களும் இளை ஞர்களும் பகுத்தறிவாளர் கழக தோழர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பெரியார் தினேஷ் வரவேற்றும் வருகை தந்த அனைவருக்கும் குடந்தை ஒன்றிய இளைஞரணி தலைவர் மனோகரன் நன்றி கூறியும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் வலங்கை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தோழர் இந்திரஜித் மாவட்ட கழகத்தின் சார்பாக மூன்று விடுதலை சந்தாக்களையும் மாவட்ட துணைச் செயலா ளர் தமிழ்மணி மூன்று திரா விடப் பொழில் சந்தாக்களை யும் கழக துணைத் தலைவரி டம் வழங்கி மகிழ்ந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.

Comments