விசாரணைக் கைதியை நீண்ட காலம் சிறைக் காவலில் வைத்திருப்பது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது : உயர்நீதிமன்றம் கருத்து

மும்பை,பிப்.25- 'விசாரணை கைதி மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், சிறையில் செலவழித்த நாட்களை, அவருக்கு திரும்ப தர இயலாது' என, வழக்கு ஒன்றில், மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டம் கல்யாணைச் சேர்ந்தவர் அரேப் மஜீத் (வயது27)  சிரியா சென்ற அவர், அய்.எஸ்., பயங்கர வாதிகளுடன் தொடர்பில் இருந்து, பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியா வந்ததாக கூறி, 2014இல் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

  மும்பை உயர் நீதிமன்றம், மஜீத்தின் பிணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிடேல் ஆகியோர் முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மஜீத்துக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள, அரேப் மஜீத் மீதான வழக்கின் விசாரணை, ஆறு ஆண்டு களாக தொடர்கிறது. இதுவரை, 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி யும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை. வழக்கு விசாரணையில் ஏற்பட்ட தாம தத்தை கருத்தில் வைத்தே, விசா ரணை நீதிமன்றம், மஜீத்துக்கு பிணை வழங்கியுள்ளது. பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபட இந்தியா திரும்பியதாக, அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது சட் டத்திற்கு எதிரானது. ஆனால், அதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக உறுதி செய்யப் படவில்லை. ஒருவர்மீது, சந்தே கத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து, நீண்ட காலம் சிறைக் காவ லில் வைத்திருப்பது, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விசார ணையின் முடிவில், அந்த நபர் குற்றவாளி அல்ல என, முடிவுக்கு வரும் நிலையில், சிறையில் அவர் செலவழித்த ஆண்டுகளை திரும்ப தர இயலாது. எனவே, விசாரணை நீதிமன்றம் வழங்கிய பிணை, நிபந் தனைகளுடன் அனுமதிக்கப்படு கிறது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Comments