படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர் -அமைச்சராக இருந்தவர் ராம்தேவின் மோசடிக்கு உடந்தையாக இருக்கலாமா?

இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டனம்

புதுடில்லி, பிப். 24 சாமியார் ராம்தேவின் கரோனா மருந்தை அறிமுகப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மீது இந்திய மருத்துவக் கழக கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று நோய்க்கு பதஞ்சலி தயாரித்துள்ள கோரோனில் என்ற மருந்து சிறந்த தீர்வாக இருக்கும் என்று பதஞ்சலி வர்த்தக நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் விளம்பரப் படுத்தி வருகிறார்.

இந்நிலையில்,  பிப்ரவரி 19 ஆம் தேதி, பாபா ராம்தேவ் நிறுவனம் சார் பில் ஏற்பாடு செய் யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் அந்த நிகழ்ச்சி யின் மூலம் இந்த மருந்தை அனை வருக்கும் மீண்டும் அறிமுகப் படுத்தினர்.

முறையான மருத்துவம் படித்த மருத்துவரான மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தனின் இந்த செயலுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு சார்பில் கடும் கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலி தயாரித்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எத்தனை பேருக்கு ஆய்வு செய்யப் பட்டது? ஆய்வின் முடிவு என்ன? ஆய்வு குறித்து எந்த நிறுவனம் இவர் களுக்கு சான்று வழங்கியது ?

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படாத ஒரு பொருளை, மருந்து என்று கூறி மக்களை ஏமாற்றும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது ஏன் என்றும், நாட்டு மக்கள் அனைவரும் இந்த மருந்தை பற்றி தெரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தார்மீக அடிப் படையில் நாட்டு மக் களுக்கு தாமாக முன்வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத் துள்ளது.

இந்தகோரோனில்' மருந்து கரோனா தொற் றில் இருந்து மக்களை காப்பாற்றும் என்றால், எதற்காக 35,000 கோடி ரூபாய் செலவில் தடுப்பு மருந்துக்கு செலவு செய்தீர்கள் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த மருந்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அங்கீகாரம் பெற்றது என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கூறி வருவதை உலக சுகாதார அமைப்பு,  எங்களிடம் இந்த நிறுவனம் சார்பில் எந்த ஒரு விண்ணப்பமும் இதற்காக வரவில்லை என்று ராம் தேவின் ஏமாற்றுவேலைக்கு ஏற்கனவே திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தி ருந்த நிலையில், அமைச்சரின் இந்த செயல் இந்திய மருத்துவ கூட்டமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Comments