உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கருத்தரங்கத்தில் “பாவேந்தர் பார்வையில் பெரியார்” என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரை

சென்னை,  பிப். 19 -உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்பாவேந்தர் பார்வையில் பெரியார்எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற் றது. திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் பிப்ரவரி மாதம் முழுவதும்தமிழ்த்தாய் 73” தமிழாய்வுப் பெருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் 17 ஆம் நாளில் (17-02-2021) காலை 11:30 மணியளவில்பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வி ருக்கைசார்பாகச் சிறப்புச் சொற் பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. இதில்பாவேந்தர் பார்வையில் பெரியார்எனும் தலைப்பில் பேசுவ தற்கு, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாவேந்தர் ஆய்விருக்கையின் பொறுப் பாளரும், உதவிப் பேராசிரியருமான மணிகோ. பன்னீர்செல்வம் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார். அவ ரைத் தொடர்ந்து, மன்னர் மன்னின் மகனும், புரட்சிக் கவிஞரின் பெயர னுமான கவிஞர் புதுவை கோ.செல்வ மும், உலக தமிழாராய்ச்சி நிறுவனத் தின் தமிழ்மொழி () மொழியியல் புலம் உதவிப்பேராசிரியர் முனைவர் நா.சுலோசனாவும் நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசினார்.

முன்னதாகஆய்வுக்காக பல முறை சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்ததையும், அங்கே பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்களைச் சந்தித்ததையும் நன்றி யோடு நினைவு கூர்ந்தும், தென்னாட் டுக்கே முகவரியைக் கொடுத்தவர் தந்தை பெரியார் என்றும், அதை அழகு தமிழில் கவிதையாக வடித்தவர் புரட்சிக் கவிஞர் என்றும்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்கு நரும், தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசும் போது குறிப்பிட்டார்.

பொதுச்செயலாளர்துரை.சந்திர சேக ரன்  பேசும்போது, “பாவேந்தர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் புரட்சிக் கவிஞர் ஒரேயொருவர்தான் இருக்கிறார் என்று கூறி, அதற்கு சான்றாக, ‘புரட்சி கரமான கருத்துகளை கவிதை வாயிலாக வெளிப்படுத்தியதும், கடை பிடித்து வாழ்ந்தவருமான கவிஞர், புரட்சிக்கவிஞர் ஒருவர்தான் முதலும் கடைசியுமான கவிஞர்என்று  தந்தை பெரியாரே கூறியிருப்பதை எடுத்து ரைத்தார். தொடர்ந்து, 1928 இல் மயிலாடுதுறையில் கூட்டத்தில் பெரியாரின் பேச்சைக் கேட்டது முதல், கனகசுப்புரத்தினமாக இருந்த பாரதிதாசன் - சுப்பிரமணிய துதி அமுது பாடிய பாரதிதாசன், அன்றே புரட்சிக்கவிஞராக மாறியதை உணர்ச்சி பூர்வமாகக் குறிப்பிட் டார். அன்று இரவிலிருந்தே அவர் வீட்டில் ஆரிய பண்டிகைகள் எதுவும் கொண்டாடுவதில்லை என்றும், தலைமுறைகள் தாண்டியும் இன்றும் அது தொடர்கிறது என்றும் குறிப் பிட்டார். மேலும் அவர் புலவர் ராம நாதன், வா.சே.குழந்தைசாமி, கவிஞர் கண்ணதாசன் இன்னும் இன்றைய புதுக்கவிதை எழுதுகின்ற ஏராள மான கவிஞர்கள் பெரியார் கருத்து களைப் பற்றி, பாடியதைக் குறிப்பிட் டுக் காட்டிவிட்டு, புரட்சிக்கவிஞரைப் பற்றி குறிப்பிட வரும்போது, நால் வருண கோட்பாட்டை பெரியார் எதிர்த்ததையும் அதையே, ”முகத்தில் பிறப்பானுண்டோ முட்டாளே ... நான்முகனும் உண்டோடா நாயேஎன்று சினத்தை தீயாகக் கொட்டி யதையும் சுட்டிக்காட்டி, அவர் ஏன் புரட்சிக் கவிஞர் என்பதை சொல்லா மல் சொல்லி, பார்வையாளர்களையும் அதே உணர்வுக்கு ஆட்படுத்தினார்.

முடிவாக, சிதம்பரத்தில் அலங்கார ரதத்தில் பெரியார் ஊர்வலமாக வந்த தையும், ”பார் அவர்தான் பெரியார்என்ற கவிதையை ஏற்ற இறக்கத்தோடு எடுத்துரைத்து, அதில் புரட்சிக் கவி ஞரின் கற்பனை நயத்தையும், சொற் பிரயோகத்தையும் சொல்லி அனை வரையும் உணர்வுவயப்பட வைத்தார். இது போன்ற பல வரலாற்று நிகழ்வு கள் மூலம் புரட்சிக்கவிஞர் பார்வை யில் பெரியார்தான் உச்சமாக, இமய மாக மிளிர்வதையும், ’பெரியாரின் கொள்கைகள்தான் புரட்சிக்கவிஞ ரின் பார்வைஎன்பதையும் பலத்த கைதட்டல்களுக்கிடையே நிறுவி தனது உரையை நிறைவு செய்தார்.

ஆய்வுரையின் பொறுப்பாளராக இருந்து வரவேற்றுப் பேசிய உதவிப் பேராசிரியர் மணிகோ. பன்னீர் செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கியதோடு நன்றி கூறியும் நிகழ்ச் சியை நிறைவு செய்தார்.

சிறப்புரைக்கு முன்னதாகதமி ழானவன், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்என்ற பாடலை பன்னிசை முருகன் பாடி அனைவரையும் மகிழ் வித்தார். பாடலுக்கு அண்ணாமலை விசைப்பலகை வாசித்து பாடலை மெருகேற்றினார். பொதுச் செயலா ளர் துரை. சந்திரசேகரனின் உரை விரைவில் பாவேந்தர் ஆய்வி ருக்கை சார்பில் புத்தகமாக வெளியிடப்படும் என்றுஆய்விருக்கையின் பொறுப்பாளர் உதவிப்பேராசிரியர் முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், கோவி.ராகவன், கோ.மஞ்சநாதன், மணித்துரை, விஸ்வாஸ், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலை வர் வீரபத்ரன், வடலூர் நகரத் தலை வர் புலவர் சு. இராவணன், வடலூர் கழக செயலாளர் இரா. குணசேகரன், கலைச்செல்வி, அரும்பாக்கம் தாமோ தரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தாம்பரம் மா.குணசேகரன், தோழர் அருள், ஊரப்பாக்கம் மா.ராசு மற்றும் அரங்கம் நிறையுமளவுக்கு ஆய்வு மாணவர்கள் பங்கேற்று நிகழ்வை கண்டும், கேட்டும் பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments