நூல் அரங்கம் - நூல் விமர்சனம்

சமூகநீதி பன்முகங்கள்


ஆசிரியர்: நீதியரசர் .கே.ராஜன்

சேது பப்ளிஷர்ஸ்,

எஸ் 79, அண்ணா நகர்,

சென்னை - 600 040.

விலை : ரூ.200/-

கிடைக்குமிடம் :

பெரியார் புத்தக நிலையம், சென்னை - 7.

நீதியரசர் டாக்டர் .கே.ராஜன் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஓர் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று படிப்படியாக முன்னேறி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக வளர்ந் தவர். ஓய்வு பெற்றபின் தமிழ்நாடு அரசின் பல்வேறு விசாரணை மற்றும் நிருவாகக் குழுக்களில் செயல்பட்டுத் தொண்டாற்றி யவர். சிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர். அவர் பல்வேறு காலகட்டங் களில் சமூகநீதி குறித்து பேசிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இந்நூலுக்கு அன்றைய தமிழக முதல் வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அணிந்துரை வழங்கினார். அந்த அணிந் துரையில், “நீதியரசர் டாக்டர் .கே.ராஜன் அவர்களின் இந்தத் தொகுப்பு நாட்டில் சமூகநீதிக் கொள்கையில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவர்களுக்கு ஒரு வழி காட்டியாக இருக்கும்என்று தெரிவித் துள்ளதே இந்நூலின் சிறப்பை விளக்கும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இடஒதுக்கீடு பிரச்சினை எதிர்கொண்ட அறை கூவல்களையும் பல்வேறு வழக்கு களின் தன்மைகளையும் விளக்கியுள்ள துடன் பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை குறிப்பாக, கிரிமிலேயர் என்னும் மேல்மட்ட வடிகட்டி முறையில் ஏற்படும் விளைவுகளை கூறு வதுடன், பிற்படுத்தப்பட்டோரில் பொரு ளாதாரத்தில் ஓரளவு வளர்ந்த குடும்பங்கள் மட்டுமே போட்டியிடும் அய்..எஸ்,, அய்.பி.எஸ். பதவிகளுக்கு அவர்களின் பிரதி நிதித்துவம் நீக்கப்பட்டதை விளக்கு கிறார்.  உயரிய நீதிமன்றங்களின் (உச்சநீதி மன்றம் மற்றும் சில உயர்நீதி மன்றங்களின்) பார்வைகளையும் விளக்கி எழுதியுள்ளார். எடுத்துக்காட்டியுள்ள வழக்குகள் வழக்கு ரைஞர்களுக்கு பெரிதும் பயனளிப்பவை.

மண்டல்குழு தொடர்பான ஒரு வழக்கில் 1992இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்னும் தீர்ப்பையும், அதில் நீதியரசர் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தனியே வழங்கிய தீர்ப்புரையில்உச்ச அளவாக 50 விழுக்காடு நிர்ண யிப்பதை நியாயப்படுத்த முடியாதுஎன்று கூறிய கருத்தையும் விளக்குகிறார். இது பலருக்கு புதிய தகவலாகும். மேலும் அவரது கருத்துகள் சமூகநீதிக் களத்தில் செயல்படுவோருக்கு ஒரு வழிகாட்டும் நெறிமுறைகள் போல் அமைந்துள்ளன.

மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் மேலும் இருக்கும் சிக்கல் களை களைவதற்கான தீர்வுகளையும் வழங்குகிறார். மேலும் மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு எதிர்நோக்கும் அறை கூவல்கள், ‘கிரீமிலேயர்என்னும் மோசடி மற்றும் சட்டங்களை இயற்றும் அவைகளில் சமூகநீதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் உள்ள சிக்கல் கள் ஆகியவற்றை விளக்குகிறார்.

மேலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இடஒதுக்கீட்டைப் பாது காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை களையும் பட்டியலிடுகிறார். இதுவும் தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டிற்கு சட்டத்தில் பிரிவு ஏதுமில்லை என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து களையும் சட்டமியற்றும் அவை உறுப்பி னர்களாக உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஊன்றிப் படிக்க வேண்டும்.

மேலும் தேர்தல்கள் குறித்த அவரது கருத்துகள் வேறுபட்ட கோணத்திலும் சிந்திக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளன. சமூகநீதிக் களத்தில் போராடுகின்றவர் களும், மக்கள் பிரதிநிதிகளும், ஊடகவிய லாளர்களும், அரசுத் துறையின் பணி நியமன அதிகாரப் பிரிவில் உள்ளவர்களும் கட்டாயம் படித்துத் தெளிய வேண்டிய நூல்.

- வை. கலையரசன்

வகுப்புரிமைப் போராட்டம்

ஆசிரியர்:

பேராசிரியர் .அன்பழகன்

வெளியீடு:

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு

84/1 .வெ.கி. சம்பத் சாலை,

பெரியார் திடல், சென்னை 600 007

மொத்த பக்கங்கள்: 168

நன்கொடை: ரூபாய் 80/-

ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத் தப்பட்ட மக்கள் தங்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமையை பெற்றிட நீதி கட்சியால் வழங்கப்பட்டு வந்த வகுப்பு வாரி உரிமை செல்லாது என்று1950ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட போது, அன் றைய திராவிட இயக்க தளபதியாக விளங் கிய பேராசிரியர் அன்பழகன் அவர்களால் எழுதப்பட்ட நூலின் மறுபதிப்பு.

1928 முதல் 1950 வரை அமலில் இருந்த கம்யூனல் ஜீ ஆணை செண்பகம் துரைராஜன் என்னும் பெண்மணியின் பொய்யான பிரமாண பத்திரத்தை அடிப் படையாகக் கொண்டு தொடரப்பட்ட வழக்கால் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரியார் இந்த தீர்ப்பை கண்டவுடன் கொந்தளித்தார். தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். விளைவு தமிழர்கள் களத்திற்கு வந்தனர். அதன் காரணமாக இந்திய அரசியலமைப் பின் முதல் சட்டத் திருத்தம் ஏற்பட்டது. சட்டமியற்றும் அவையான நாடாளு மன்றத்தில் ஓர் உறுப்பினர் கூட இல்லாத இயக்கத்தின் தலைவரான தந்தை பெரியார் சட்டத் திருத்தத்திற்கு காரண மாக அமைந்தார்.

அந்த காலகட்டத்தில் வகுப்புவாரி உரிமையின் தோற்றம், வளர்ந்த விதம், அதை ஒழிக்க பார்ப்பனர்கள் மேற் கொண்ட முயற்சிகள், அவற்றை முறிய டித்து வகுப்புரிமை காக்கப்பட்ட விதம், செண்பகம் துரைராஜன்தொடுத்த வழக் கின்  தீர்ப்பு,  இந்த தீர்ப்பை  பார்ப்பனர்கள் கொண்டாடிய சூழல், தொடர்ந்த போராட்டங்கள் ஆகியவற்றை வரலாற்று பூர்வமாக விளக்குவதுடன், அரசியல மைப்பு சட்டம் உருவான விதத்தையும், வகுப்புவாரி உரிமை பாதுகாக்கப்பட்ட நிலையையும், அதற்கான நியாயமான காரணங்களையும், புள்ளிவிவரங்கள் அளிக்கிறார் பேராசிரியர் அவர்கள். சமூ கத்தில் களமாடும் அனைத்து தோழர்களும் படிக்க வேண்டிய வரலாற்று ஆவணம்.

- ழகரன்

வகுப்புரிமை வரலாறு

ஆசிரியர் : கி.வீரமணி

அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு என்பது நீண்ட காலமாக மனுவின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று இருந்த அநீதியை எதிர்த்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொடங்கி  இன்று வரை ஒரு உரிமை போராட்டமாய் முகிழ்த்து நிற்கும் வரலாற்றை பற்றிய சித்திரமே இந்நூல். ஓயாமல் உரி மைக்காக போராடுவதற்கான களத்தை பார்ப்பன மேலாதிக்க வாதிகள் உருவாக்கி வரும் சூழலில் நம் போராட்ட வழி முறைகளை கூர்மைப்படுத்த ஒரு சிறந்த கையேடே இந்நூல்.

வகுப்புவாரி உரிமையின்


வரலாறும் பின்னணியும்

ஆசிரியர் : தந்தை பெரியார்

'நீ அடிமையாக இரு என்று சொல்லும் துணிச்சலில்லாமல், நீ அடிமையாயிருக்க படைக்கப்பட்டிருக்கிறாய், கடவுளின் விருப்பச் செயல் இது' என்று சமூகத்தின் பெரும்பான்மை மக்களினை சுரண்டி கொழுத்த பார்ப்பனர்களின் ஆதிக்க கட்டடங்களை கடப்பாரை கொண்டு தகர்த்த தந்தை பெரியாரின் வகுப்புவாரி உரிமை தொடர்பான சிந்தனை செல்வங்களின் சிறு தொகுப்பாய் இந்நூல்.

வகுப்புவாரி உரிமை ஏன்?


ஆசிரியர் : தந்தை பெரியார்

ஒவ்வொரு வகுப்பாருக்கும் இத்தனை உத்தியோகம்தான் என்று வரையறுத்துவிட வேண்டும், அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்டு எவராவது, எந்த வகுப்பினராவது  ஓர் ஆள் அதிகமாக உத்தியோகம் பார்த்தால், அவர் மீது துராக்கிர ஆக்கிரமிப்புக் குற்றம் சாட்டப்பட்டு அவனுக்கு வேலை கொடுத்தவனுக்கு நாணயக் குறைவுக் குற்றம் சாட்டியும் அதற்கு ஆன தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் எல்லா வகுப்பினரும் சமநிலை எய்த முடியும். 

- பெரியார், பெரம்பூரில் 12.8.1950


Comments