செய்தியும், சிந்தனையும்....!

போதாமையின் வெளிப்பாடு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திட தமிழ்நாடு அரசு முடிவு?

இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், இந்த முடிவு அரசின் நிதிநிலை நெருக்கடியை மறைக்கும் சூழ்ச்சியே! - 58அய் 59 ஆக்கிய அரசு - இப்பொழுது 59அய் 60 ஆக்குகிறது. ஓய்வு பெறுவோர்க்கு ரூ.10 ஆயிரம் கோடி ஓய்வூதியப் பயன்களை வழங்க முடியாத நிலையில் தண்ணீர் அதிகம் என்று உப்பை அள்ளிப் போடுவதும் உப்பு அதிகம் என்று தண்ணீரை ஊற்றுவதுமான தமிழ்நாடு அரசின் போதாமையின் வெளிப்பாடே இது!

'மயக்க பிஸ்கெட்டுகள்'

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேறுகிறது!

தேவையான ஒன்றே! மயக்க பிஸ்கெட் போன்றது ஆன்லைன் சூதாட்டம்!

அதுவரை பாராட்டு!

டில்லியில் டிராக்டர் பேரணியில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து பிரியங்கா ஆறுதல்.

பரவாயில்லை, இதையாவது தடுக்காமல் இருந்ததே அரசு - அதுவரை பாராட்டு!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளோ!

டில்லி விவசாயிகள் போராட்டக்காரர்களின் பக்கம் - தான் நிற்பதாக அமெரிக்கப் பாப் பாடகர் ரிகானா தெரிவிக்க, அவர்மீது டில்லி காவல்துறை வழக்கொன்றைப் பதிவு செய்த நிலையில்...

பாப் பாடகர் ஒரு படி மேலே சென்று தன் கருத்தை மேலும் அழுத்தமாக இரட்டிப்பாகக் கூறியுள்ளார்.

மில்லியன் டாலர் கேள்வி

சவுதி, அய்க்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட 7000 இந்தியர்கள் சிறையில் உள்ளனர் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்.

தகவல் சொல்லுவது தான் அமைச்சர் வேலையா? அவர்களை விடுவிக்க செய்தது என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி!

6 மாதம் கழிந்து விட்டால்

புதிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தலைமை அதிகாரிகளின் பதவிக் காலம் 6 மாதம் நீட்டிப்பு.

ஆமாம் - இப்பொழுது தேர்தல் நடத்தினால் என்னாகும் என்று .தி.மு.. அரசுக்குத் தெரிந்ததுதான்;  ஆறு மாதம் கழித்து தி.மு.. ஆட்சியில்தான் தேர்தல் நடைபெறும் போலும்!

விலை ஏற்றம் ஒரு நாள் வெடிக்கப் போகிறது

சமையல் எரிவாயு சிலிண்டர் மேலும் ரூ.25 அதிகரிப்பு. சென்னையில் ரூ.735 ஆக நிர்ணயம்.

அதிகம் சூடேறினால்...

கொட்டினால் தான் தேள்!

சிதம்பரம் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் கட்டணம் குறைப்பு - அரசாணை வெளியீடு!

கொட்டினால் தான் தேள்' - ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்பது நம் நாட்டின் பழமொழிகள். இதற்காக மாணவர்கள் 58 நாட்கள் போராட வேண்டியதாயிருந்தது.

டமில் நாடா?

தமிழ்நாடு என்பதுடமில் நாடு' என்று (அரசு ரீதியாக) உச்சரிக்கவும், எழுதவும் படுகிறது. இது தவறு TAMIZH NADU என்று எழுத வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை டமில்நாடு அரசுக்குத் தாக்கீது.

சரியான கிடுக்குப்பிடிதான்! அது என்ன டமில் நாடு?

Comments