பாங்காங் ஏரியில் உள்ள இந்திய பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்து விட்டார் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, பிப். 13-- ‘பாங்காங் ஏரி பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனாவுக்கு பிரதமர் மோடி தாரை வார்த்து கொடுத்து விட்டார்,’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் கடந்த மே  மாதம் சீன ராணுவம்  ஊடுருவியது. இதன் காரணமாக, அங்கு இந் தியா -சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இத னால், கிழக்கு லடாக்கில் பல் வேறு பகுதிகளில் இருநாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்கு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. இதில்,  9 கட்ட பேச்சுவார்த்தையின்போது, முக்கிய இடங்களில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெற இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.

இது தொடர்பாக நாடா ளுமன்றத்தில் 11.2.2021 அன்று பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், , ‘‘பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப் பட்டு வருகின்றனர்.  இந்தி யாவின் ஒரு அங்குல நிலப் பரப்பை கூட  யாரும் பறித்து கொள்ள அனுமதிக்க முடி யாது,” என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் 12.2.2021 அன்று  அளித்த பேட்டி வருமாறு:

பாதுகாப்பு துறை அமைச் சர் பொய்யான ஒரு அறிக் கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வழங்கி இருக்கிறார். பாங்காங் ஏரி யின்பிங்கர் 3’ பகுதியில் இந்திய வீரர்கள் இருப்பதாக தெரிவித்தார். ‘பிங்கர் 4’ பகுதி நமது நாடடுக்கு சொந்தமான  பிராந்தியமாகும். பிரதமர் மோடி ஏன் இந்திய பிராந் தியத்தை சீனாவுக்கு தாரை வார்த்தார். இந்த கேள்விக்கு பிரதமர் மோடியும், அமைச் சர் ராஜ்நாத் சிங்கும் பதில ளிக்க வேண்டும். கடினமுயற் சிக்குப் பிறகு நமது வீரர்கள் கைலாஷ் பகுதியை கைப் பற்றினார்கள். பின்னர் ஏன் அவர்கள் அங்கிருந்து திரும்பி அழைத்துக் கொள்ளப்பட்ட னர். வீரர்கள் அங்கு இருந்து திரும்பியதால் இந்தியாவிற்கு என்ன கிடைத்தது? முக்கிய மான பகுதியான  டெப்சாங் சமவெளி பகுதியில் இருந்து சீனா ஏன் திரும்பி செல்ல வில்லை.  நாட்டை பாதுகாப் பது பிரதமரின் கடமை. ஆனால், இந்தியாவின் பகுதி களை சீனாவிற்கு அவர் தாரை வார்த்துவிட்டார்.

பிங்கர் 8 வரைதான் இந்தியாவின் பகுதி

இந்திய பிராந்தியத்தை தாரை வார்த்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில் தவறான தகவல் களை பரப்ப வேண்டாம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில், “பாங்காங் ஏரியின் பிங்கர் 4 வரை இந்திய பிராந்தியம் இருக்கிறது என வலியுறுத்துவது முற்றிலும் தவறானது. இந்தியாவின் நில பரப்பானது இந்திய வரைப் படத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1962ஆம் ஆண்டு முதல் 43,000 சதுர கிலோ மீட்டர் பகுதி, சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருக்கிறது. இந்தியாவின் கூற்றுப்படி, உண்மையான கட்டுப்பாடு கோடானது பிங்கர் 4இல் இல்லை. பிங்கர் 8 வரைதான் இருக்கிறது. எனவே தான், பிங்கர் 8 பகுதி வரை ரோந்து செல்லும் உரி மையை இந்தியா பராமரித்து வருகிறது,’ என கூறப்பட்டு உள்ளது.

Comments