நீதியின் போக்குபற்றி மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி

நீதிமன்றத்துக்கு சென்றால் வருத்தப்பட வேண்டி வரும் - நீதிமன்றத்தை தான் நாடப் போவதில்லை" என்று இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ரஞ்சன் கோகாய், தன் மீது போடப்பட்ட வழக்கை விசாரித் தது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்ரா விமர்சனம் செய்திருந்தார்.

இது தொடர்பாக நீங்கள் நீதிமன்றத்தை நாடு வீர்களா?” என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு. “நியாயத்தை எதிர்பார்த்து நீதிமன்றம் சென்று, நமது கறையை போக்கிக் கொள்ள நினைப்பது, வருத்தத்தில் தான் முடியும்என்று கூறினார்

இந்த வழக்கு குறித்த தகவல்கள் அந்த பெண் மணிக்குத் தெரியவில்லைஎன்று மஹீவா மொய்த்ரா பெயரை குறிப்பிடாமல் கூறிய கோகாய், “இந்த வழக்கு குறித்த ஆவணங்களை நான் எனக்கு அடுத்த நிலையில் இருந்த நீதிபதி பாப்டேவிடம் ஒப்படைத்து விட்டேன், அவர் தான் விசாரணை நீதிபதிகளை நியமித்தார்என்று கூறினார்.

'இந்தியா டுடே' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த கோகாய் மேலும் கூறியதாவது :

நீதித்துறையை சீரமைக்கத் தேவையான, முறையான வழிகாட்டுதல்கள் உடனடியாக தேவைஎன்று தெரிவித்தார். “மோசமான நீதித்துறையை வைத்துக்கொண்டு 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை நாம் எப்படி எட்ட முடியும்?” என்று கேள்வி யெழுப்பினார்.

2020ஆம் ஆண்டு உற்பத்தி துறை அனைத்தும் சரிவை சந்தித்தபோது, நீதித்துறை மட்டுமே நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையில் அபரிமிதமான வளர்ச்சியடைந்ததுஎன்று கிண்டலடித்தார்.கரோனா கால கட்டத்தில் மட்டும், கீழமை நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 3 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் ஏழாயிரம் வழக்குகளும் பதியப்பட்டு நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீதித்துறை எப்படி செயல்பட வேண்டும் என்று தெரிவித்த கோகாய், “அரசு அலுவலர்களை நியமிப்பது போல் நீதிபதிகளை நியமிக்காதீர்கள், அந்த வேலைக்கு பொருத்தமான, தகுதியானவர்களை நியமியுங்கள்.

வழக்கைத் தீர்மானிக்க முழு நேர அர்ப்பணிப்பும், வேட்கையும் வேண்டும். கால நேரம் பார்த்து வேலை செய்ய முடியாது. 24 மணி நேரமும் இதைப் பற்றிய சிந்தனை இருக்கவேண்டும். அதிகாலை 2 மணிக்கு உங்கள் மனதில் ஏதாவது முக்கிய தகவல் தோன்றினாலும், அதை உடனடியாக எழுந்து குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நீதிபதி என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும், எத்தனைப் பேருக்கு இது புரிந்திருக்கிறது?” என்றார்.

சட்டக் கல்வியில் பயிற்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியபோது: “போபாலில் உள்ள தேசிய நீதித்துறை பயிற்சி மய்யத்தில் என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது? கடல் பற்றிய சட்டங்கள்  தான், நீதி நெறிமுறைகள் பற்றி எதுவும்சொல்லித் தரப்படு வதில்லை; தீர்ப்பு எப்படி எழுத வேண்டும் என்றோ, நீதிமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு நடத்துவது என்றோ சொல்லித்தரப்படுவது இல்லைஎன்று கூறினார்.

என்னதான்  சமாதானம் சொன்னாலும் ஓய்வுக்குப் பின், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன்கோகாய், ஆளும் கட்சியின் பரிந்துரையின்படி மாநிலங்களவை உறுப்பினரானது ருசிக்கத் தக்கதாகவோ, இரசிக்கத்தக்கதாகவோ இல்லையே! ஓய்வுக்கு முன்னே நீதிபதிகள்  அளிக்கும் தீர்ப்புகள் ஓய்வுக்குப்பின் உயர் பதவிகளைப் பெறுவதற்கான முன்னோட்டம் என்ற கருத்து மக்களிடம் நிலவி வருகிறதே! 

Comments