பெருமுதலாளிகளுக்கானதே மோடி அரசு

.சிதம்பரம் குற்றச்சாட்டு

 புதுடில்லி, பிப். 14- ஏழை, எளிய மக்களுக்கு மத்திய பாஜக அரசு கடந்த 36 மாதங்களில் எந்த உதவியையும் செய்ய வில்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சரு மான . சிதம்பரம் குறிப் பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: யாருக்காக இந்த பட்ஜெட்? என்ற விவாதத்தில் எல்லோ ரும் கலந்து கொள்ள வேண் டும். இந்தியாவின் மொத்த செல்வத்தில் 73 சதவிகிதம் யார் கைகளில் உள்ளது? 1 சதவிகிதம் பேர்களின் கைக ளில் அது உள்ளது. அவர்க ளுக்கும் அவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக் கும் கடந்த இரண்டு ஆண்டு களில் அளித்த கடன் தள்ளு படி ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் கோடி. வரிச்சலுகை ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி. இப்பொழுது தாக்கல் செய் யப்பட்டுள்ள பட்ஜெட் யாருக்கு உதவிகளும் சலுகை களும் தந்திருக்க வேண்டும்? விவசாயிகள், குத்தகை விவசாயிகள், தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், உழைக்கும் வர்க்கம், நடுத்தர வர்க்க மக்கள் - ஆகியோருக்கு அல்லவா உதவிக் கரம் நீட்டியிருக்க வேண்டும்? கடந்த 36 மாதங்களாக மேற்கண்ட எளிய மக்களுக்கு எந்த உதவி யும் செய்யாத பட்ஜெட்டாக இது உள்ளது. இது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய பட்ஜெட்.இவ்வாறு . சிதம் பரம் கூறியுள்ளார்.

Comments